\
Frequent Painkiller & Antibiotic Use May Damage Kidneys
கோப்புபடம்Ai

அடிக்கடி வலி நிவாரணிகள் பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

மேலும் இந்த மருந்துகளை தொடர்ச்சியாகவோ அல்லது அதிக அளவிலோ பயன்படுத்துவது சிறுநீரகங்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது திடீர் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Published on: 

வழக்கமான வலி நிவாரணிகள் மற்றும் தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவது நமது சிறுநீரகங்களை பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மருந்துகள் இரத்த நாளங்களைச் சுருக்கி, சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் சிறுநீரக திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.

கோப்புபடம்
கோப்புபடம்AI

மேலும் இந்த மருந்துகளை தொடர்ச்சியாகவோ அல்லது அதிக அளவிலோ பயன்படுத்துவது சிறுநீரகங்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது திடீர் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே மருத்துவரின் மேற்பார்வையின்றி, வலி நிவாரணிகளையோ அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளையோ சுயமாக உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அவசியமானால் மருத்துவரின் ஆலோசனையுடன் குறைந்த அளவிலும், மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com