வாய் துர்நாற்றமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் சங்கடங்களை தவிர்க்கலாம்!

வாய் துர்நாற்றமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் சங்கடங்களை தவிர்க்கலாம்!
வாய் துர்நாற்றமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் சங்கடங்களை தவிர்க்கலாம்!

வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இல்லாவிட்டால் பற்சொத்தை, பற்சிதைவு மற்றும் பிற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதில் குறிப்பாக வாய் துர்நாற்றம். வயிறு மற்றும் வாயில் புண்கள் இருந்தால் துர்நாற்றம் வீசும். அதுதவிர தனிமனித சுத்தத்தில் அடங்குகிற வாய் சுத்தத்தை முறையாக பராமரிக்காவிட்டாலும் வாய் துர்நாற்றம் வீசும். சில நேரங்களில் சாப்பிடுகிற உணவு மற்றும் வாயில் தொற்றுகள் இருந்தாலும் துர்நாற்றம் வீசலாம். சில உணவுகள் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவும்.

க்ரீன் டீ: இந்த டீயில் பாலிபினால்கள் போன்ற ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகம் இருக்கிறது. மேலும் அதில் கஃபைன் இருப்பதால் அளவாக குடிப்பது வாய் துர்நாற்றத்தை தடுக்கும்.

இஞ்சி: இதிலுள்ள 6 ஜிஞ்சரால் வாய் துர்நாற்றத்தை குறைக்கும். இடித்த இஞ்சி, எலுமிச்சைச் சாறை வெந்நீரில் கலந்து குடிக்க வாய் துர்நாற்றம் போகும். இதற்கு பதப்படுத்தப்பட்ட இஞ்சியை பயன்படுத்துவதை விட ஃப்ரெஷ் இஞ்சியை பயன்படுத்துவது நல்லது.

சிட்ரஸ் பழங்கள்: இதிலுள்ள வைட்டமின் சி, வாய் துர்நாற்றத்தை போக்க உதவும். மேலும் பல் சம்பந்தமான பிரச்னைகளையும் குறைக்கும்.

தயிர்: இந்த பால் பொருளானது வாய் துர்நாற்றத்தை குறைக்கும். இதில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால் உடலிலுள்ள கிருமிகளை குறைக்கும். இதனால் வாய் துர்நாற்றமும் குறையும்.

டார்க் சாக்லெட்: சாக்லெட் சாப்பிட்டால் பற்சொத்தை ஏற்படும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அது வாய் துர்நாற்றத்தை போக்கும் என்பது முரண்பட்டதாக கருதப்படுகிறது. இது கிருமிகளை வெளியேற்றுவதுடன், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் அழுக்குகள் படியாமலும் தடுக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com