நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு ஆலோசனை: என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது? இதோ லிஸ்ட்!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன, எதை எடுத்துக்கொள்ள கூடாது? என்பதை விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.
உணவு
உணவுமுகநூல்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன, எதை எடுத்துக்கொள்ள கூடாது? என்பதை விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

தாரணி கிருஷ்ணன்
உணவியல் நிபுணர்
தாரணி கிருஷ்ணன் உணவியல் நிபுணர்PT

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:

1. சியா விதை - அதிக அளவு நார்ச்சத்தும் நல்ல கொழுப்புச்சத்தும் கொண்ட உணவு பொருள். இது ஒரு வகையான விதை. இவ்விதைகளை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அத்துடன் சிறிது பால் சேர்த்து சாப்பிடலாம். அல்லது ஊறவைத்த சியா விதையுடன் கொய்யாவை சேர்த்து சாப்பிடலாம்.

2. ஆளி விதைகள் (Flax seeds) - நார்ச்சத்து அதிகம் உள்ள விதைகள் இவை. இதை நன்கு வறுத்து சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது வறுத்து, பொடியாக அரைத்து தோசை - இட்லி மாவு, சூப், சாம்பார் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்.

டுத்து கொள்ள வேண்டிய உணவுகள்
டுத்து கொள்ள வேண்டிய உணவுகள்முகநூல்

3. 1 கப் கொய்யா பழங்கள் = 200 மி.லி. கட் புரூட்ஸ். கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் அதை அப்படியே உட்கொள்ளும் போது, அதாவது விதைகளுடன் சாப்பிடும் போது அதிக அளவு நார்ச்சத்து கொண்ட சிறந்த உணவாக இருக்கும்.

4. பப்பாளி பழம் - பி கரோட்டின் அதிகம் உள்ள பழவகை. இவை கண்களுக்கு நல்லது. அதுமட்டுமல்ல சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். மேலும் இப்பழங்கள் இதய நோய் மற்றும் உடலில் வீக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றது. இப்பழத்தை முழு பழமாக சாப்பிடுவது நல்லது. ஜூஸாக உட்கொள்வதை தவிர்த்து விடலாம்.

5. குதிரைவாலி அல்லது திணை போன்ற சிறுதானிய உணவுகளை வறுத்தோ, முளைக்கவைத்தோ, புளிக்க வைத்தோ... இட்லி, அப்பம், பொங்கல், உப்மா போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். இவ்வகையான உணவு பொருள்களில் சாதாரணமாக நாம் உட்கொள்ளும் அரிசியை விட அதிக அளவு வைட்டமின், அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் இருக்கும். எனவே இவை குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1. பாக்கெட்டுகளில் சேமித்துவைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அவை அதிகளவு கார்போஹைட்ரேட் உடையதாகவும் குறைந்த அளவு நார்ச்சத்து உள்ளதாகவும் இருக்கிறது. இவை உடலுக்கு கேடு விளைவிக்கும்.

2. சர்க்கரை, வெல்லம் அல்லது பனை சர்க்கரையை அதிக அளவு உண்ணும் போது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆகவே அவற்றை தவிர்க்கவும்.

3. மைதா மற்றும் சோள மாவு - இவை இரண்டிலும் நார்ச்சத்து இல்லை. மேலும் இவை தயாரிக்கப்படும் போது அதில் உள்ள சத்துகள் எல்லாம் அகற்றப்பட்டுவிடுகின்றது. இதனால் பெரும்பான்மையான சத்துகள் இழப்பிற்கு பிறகுதான் நமக்கு கிடைக்கிறது. ஆகவே இவற்றையும் தவிர்க்கவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:
தவிர்க்க வேண்டிய உணவுகள்:முகநூல்

4. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சிவப்பு இறைச்சி என வகைப்படுத்தப்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் உள்ளடக்கிய இவ்வகையான உணவு பொருள்களாக இருப்பதால் இதய தமனிகளில் அடைப்புகளை உருவாக்கி இதய நோய் உருவாக காரணமாக அமைகிறது.

5. ஹாம் என்பது ஒருவகையான பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகை. இவை அதிக கொழுப்பைபினையும் அதிக சோடித்தையும் கொண்ட இறைச்சி. இதனால் இதய பாதிப்புகள் ஏற்படலாம். ஏற்கெனவே இதய நோய்களில் உலகத்தின் தலைநகராக இந்தியா இருப்பதால் இத்தகைய உணவு வகைகளை தவிர்த்து குறைந்த உப்பு மற்றும் சரியான அளவு கொழுப்பு உள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. மாம்பழம் மற்றும் பலா போன்ற பழங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதை அப்படியேவோ, ஜூஸாகவோ, மில்க் ஷேக்காகவோ எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com