”கொஞ்சநேரம் அமருவதால் கெட்டா போய்விடும்?...” : பெண்களே இந்த பதிவு உங்களுக்குத்தான்!
என்னதான் ஆண்களும் பெண்களும் சமம் என தொடர்ந்து பேசப்பட்டும், வலியுறுத்தப்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் எதுவும் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பது அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் சூழ்நிலைகளை வைத்தே அறிந்துக்கொள்ள முடியும்.
அதுவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப உறவுச் சிக்கல்கள், வீட்டு பராமரிப்புகள், அடக்குமுறைகள் இவை எதுவும் 21வது நூற்றாண்டின் நவீன யுகத்தில் வாழ்ந்து வந்தாலும் குறைந்தபாடில்லை. அதேவேளையில் பெண்களும் இதுதான் தங்களுக்கு விதிக்கப்பட்ட முறைகள் என அதிலேயே மூழ்கிப் போகவும் செய்வது தவறுவதில்லை.
ஆகவே பெண்கள் தங்களுக்கான முழு சுதந்திரத்தை அடைவதை காட்டிலும் தன்னகத்தே தன்னால், தன் பாலினத்தால் பிண்ணப்பட்டிருக்கும் முடிச்சுகளைதான் முதலில் அவிழ்க்க வேண்டும் என்பதே பலரது எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், பெண்கள் தங்களை தானே மதிப்பிட்டுக் கொள்ளும் வகையிலான முக்கியமான சில அறிவுரைகள் நிபுணர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி Amazing Satisfy என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் பெண்களுக்கான பதிவு பல்லாயிரக் கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதன் முழுவிவரத்தை தற்போது காணலாம்:
“ 1) வீட்டில் இருக்கும் வேலைகள் அனைத்தையும் ஒரே நாளில் செய்து விட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அப்படி செய்வோர் கட்டாயம் மன அழுத்தத்திற்கே பாதிக்கப்படுகிறார்கள்.
2) உங்களுக்கென நேரம் செலவிடுங்கள். ஓய்வெடுங்கள். மேஜை மீது காலை நீட்டி உட்கார்ந்து பிடித்ததை சாப்பிடலாம். அக்கடாவென சிறிது நேரம் உட்காருவதால் எந்த பாவமும் ஏற்பட்டுவிடாது.
3) தலைவலியாக இருந்தால் கொஞ்சம் நேரம் தூங்குங்கள். வெகேஷனுக்கு எங்கும் செல்ல முடியாவிட்டாலும் உங்கள் வேலையில் இருந்து சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.
4) தூங்குவதற்காக மயக்க மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துங்கள். அதனால் நீங்கள் உங்கள் மூளை மற்றும் உறுப்புகளை அழித்துக் கொள்கிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் விஷயங்களை மறந்துவிடுவீர்கள். உங்கள் மூளையை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். கவலைப்படாமல் இருங்கள், நடைபயிற்சி செய்யுங்கள். இறுதியில் எல்லாம் சரியாகவே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.
5) மெடிட்டேட் செய்யுங்கள். அமைதியாக ஓய்வெடுக்கவும். அனைத்து எதிர்மறையான சிந்தனைகளை விட்டொழித்து புதிய காற்றை சுவாசியுங்கள்.
6) கண்ணாடி முன் நின்று உங்களது அருமை என்னவென்று உணருங்கள். உங்களுக்காக சிரியுங்கள். அது உங்களுக்கு ஒரு நல்ல பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தச் செய்யும். அதன் மூலம் உங்களை நீங்களே பிரகாசமாக இருக்கச் செய்வீர்கள்.
7) உங்களுக்காகவென எதாவது செய்துக்கொள்ளுங்கள். அது பிடித்ததை சாப்பிடுவதாகக் கூட இருக்கலாம். உங்களுடைய துணை உங்களுக்காக செய்யவில்லை என்றாலும் உங்களுக்காக நீங்களே செய்துக்கொள்ளுங்கள்.
8) உங்களது வீட்டு வேலைகளை எளிமைப்படுத்தும் உங்களது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
9) உங்களுடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது உதவி கேளுங்கள். சுயமாக எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவமனைக்குச் சென்று முறையாக சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.
10) உங்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இருக்கிறதோ இல்லையோ அதன் அளவுகளை அடிக்கடி கண்காணித்துக் கொண்டே இருங்கள். இப்படி செய்வதால் பல பெண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காமல் இருந்திருக்கிறது.
இந்த நல்ல ஆலோசனையை நம்புங்கள், உங்களுக்குத் தகுதியான மதிப்பையும், அன்பையும், அக்கறையையும் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சிறந்த பெண் மற்றும் அழகான படைப்பு என்பதை மறந்துவிடாதீர்கள்.”
இவ்வாறு அந்த குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பதிவை கிட்டத்தட்ட 16 ஆயிரத்துக்கும் மேலானோர் பகிர்ந்திருக்கிறார்கள்.