ஆண்களுக்கு சரும பாதுகாப்பு அவசியமா?: என்ன சொல்கிறார் நிபுணர்
சரும பராமரிப்பு என்றாலே பெரும்பாலும் அது பெண்களுக்கான டாப்பிக் என்றுதான் நினைக்கின்றனர். ஏன் ஸ்கின் கேர் என்றால் அது பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா? அனைவருமே சரும பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சருமம் ஊட்டச்சத்துடனும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும். சரும நிபுணர் ஷஹீன் பாத் ஆண்கள் எவ்வாறு சருமத்தை பராமரிக்கவேண்டும் என்று விளக்கியுள்ளார். பெண்களை போலவே ஆண்களுடைய சருமத்திலும் துவாரங்கள், சுருக்கங்கள் என அனைத்தும் இருக்கின்றன. பெரும்பாலான ஆண்களும் தற்போது சருமத்தின்மீது கவனம் செலுத்துகின்றனர் என்கிறார் அவர்.
சரும பராமரிப்பில் ஆண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்?
உண்மையில் பெண்களைவிட ஆண்களுக்குத்தான் முகப்பரு பிரச்னை அதிகம் வருகிறது. எனவே முகப்பருக்கள் வராமல் தடுக்க சருமத்தை பராமரிப்பது அவசியம்.
எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த சருமத்தின் pH அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். சருமத்தில் அதிக எண்ணெய் சுரப்பது பல்வேறு சரும பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
சருமத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த பிரச்னை ஆண்- பெண் இருபாலருக்குமே இருக்கிறது. முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க உணவு முறை, தூக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
புற ஊதாகதிர்களிலிருந்து சருமத்தை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். வெயில்காலம் துவங்கிவிட்டது. எனவே வெளியே செல்லும்போது முடிந்தவரை சருமத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு செல்லவேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், படை போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.