மலட்டுத்தன்மைக்கு இவையெல்லாம் காரணமா? - விளக்குகிறார் நிபுணர்

மலட்டுத்தன்மைக்கு இவையெல்லாம் காரணமா? - விளக்குகிறார் நிபுணர்

மலட்டுத்தன்மைக்கு இவையெல்லாம் காரணமா? - விளக்குகிறார் நிபுணர்
Published on

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும் வகையிலேயே நமது வாழ்க்கைமுறை உள்ளது. அதில் கருவுறுதல் பிரச்னையும் ஒன்று. குறிப்பாக இளம்வயது பெண்களிடையே இந்த பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. உணவு பழக்கவழக்கம், தூக்கம், மரபணு பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த பிரச்னை அதிகளவு வருகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா விளக்கியுள்ளார். குறிப்பாக, பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகள் குறித்தும், மலட்டுத்தன்மை குறித்தும் விளக்கியுள்ளார். மோசமான வாழ்க்கைமுறை இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோயை உருவாக்குவது போலவே கருப்பை பிரச்னைகளும் உருவாகிறது என்கிறார் மல்ஹோத்ரா.

  • அதிக எடையோ அல்லது குறைந்த எடையோ மாதவிடாய் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கிறார். அதேபோல் குறிப்பாக ஆண்களும் சில பழக்கவழக்கங்களை மாற்றவேண்டியது அவசியம்.
  • புகைபிடித்தல் நுரையீரலை மட்டுமல்ல; கருவுறுதலிலும் பிரச்னைகளை ஏற்படுத்தும். புகைபிடிப்பதால் கருப்பையின் வயது அதிகரித்து கருமுட்டை உற்பத்தி குறைந்துவிடும். அதேபோல ஆண்களுக்கும் ஆரோக்யமான விந்து உருவாதல் குறைந்துவிடும்.
  • மது அருந்துதலும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது. அதிகப்படியாக ஆல்கஹால் உட்கொள்வது செல்லுலார் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தும். இது ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும்.
  • ஹார்மோன்களின் சமநிலையை மாற்றுவதில் தூக்கம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மன அழுத்தமும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு மற்றொரு முக்கிய காரணம்.
  • சுற்றுச்சூழல் மாசுக்கள் மற்றும் நச்சுகளின் நம் உடலில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இது பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கிறது.

எனவே தினசரி உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதிகளவு பயிற்சி என்பது அவசியமில்லை. ஏனென்றால், அதிக அளவு கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அது உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் அளவைக் குறைக்கும். இதுவும் ஒருவழியில் கருவுறுதல் வாய்ப்பை குறைக்கும்
என்கிறார் மல்ஹோத்ரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com