ஃபோன் பார்த்துக்கொண்டே உடல் எடையை குறைக்க முடியும் தெரியுமா?

ஃபோன் பார்த்துக்கொண்டே உடல் எடையை குறைக்க முடியும் தெரியுமா?

ஃபோன் பார்த்துக்கொண்டே உடல் எடையை குறைக்க முடியும் தெரியுமா?
Published on

இளசுகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சேர இருக்கும் ஒரே ஆசை, எண்ணம், கவலை என அனைத்து எமோஷன்ஸையும் கொடுப்பது உடல் எடை குறைப்பு அல்லது உடல் அளவை கட்டுப்பாடாக வைத்திருப்பது.

புத்தாண்டு அன்று உறுதிமொழி எடுத்தாலும் அடுத்த நாளே அந்த எண்ணமெல்லாம் கானல் நீராகிவிடும். சிலருக்கு அந்த ரிசொல்யூஷன் மோகம் ஒரு வாரம் தாக்குப்பிடிக்கும்.

ஆனால் அனைவராலுமே ஜிம்முக்கு போவது, வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் செல்வது, அதனை முறையாக கடைபிடிப்பது பெரும் சோதனையாகவே இருக்கும். 

இருப்பினும் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் ஆனால் அதற்கென தனியாக நேரம் ஒதுக்க முடியாது என சொல்பவர்களாலும் தாராளமாக நினைத்ததை செய்துக்காட்ட முடியும்.

அதுவும் செல்போன் பயன்படுத்திக் கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ சுலபமாகவே உடல் எடையை குறைக்கலாம். இதற்காக பிரத்யேகமாக டயட் முறையை பராமரிக்கவோ, ஜிம்முக்கு சென்றுதான் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே எந்த ப்ரஷரும் இல்லாமல் செய்யலாம்.

அதன்படி LEG Exercise-ஐ விருப்பம் போல் ஃபோன் பார்த்துக் கொண்டே தொடர்ந்து செய்து வந்தால் போதும், காலப்போக்கில் தொப்பை இல்லாத, நேர்த்தியான உடலமைப்பை பெறுவீர்கள்.

காலுக்கான பயிற்சிகள் மேற்கொண்டு வந்தால் இடுப்பு, தொப்பை மற்றும் தொடை பகுதிகளில் சேரும் கொழுப்புகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனை குறித்த நேரத்தில் அதாவது காலை அல்லது மாலை வேளைகளில் தவறாது செய்யலாம்

வெறுமனே ஃபோனை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல் இப்படியாக பயனுள்ளவற்றை செய்தால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்ற சொல்லுக்கேற்ப நல்ல பலனும் கிட்டும்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com