மஞ்சள் பால், உலர் பொருட்கள்... நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ்

மஞ்சள் பால், உலர் பொருட்கள்... நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ்
மஞ்சள் பால், உலர் பொருட்கள்... நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ்

இந்த தொற்றுநோய் காலத்தில் நமக்கு நோய்த்தொற்று வராமல் தடுக்க அடிப்படை வழி நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டும்தான் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

பருவகாலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்யத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலர் பொருட்கள்: காலையில் ஊறவைத்த பாதாம், திராட்சை, முந்திரி அல்லது வேர்க்கடலை என பகல்நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

ராகி: ராகியை மதிய உணவாக சாப்பிடலாம் அல்லது ராகி உருண்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதை இடைவேளைகளில் சாப்பிடலாம்.

ஊறுகாய்: எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் மாங்காய் ஊறுகாயை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

அரிசி: அரிசி உணவு எளிதில் ஜூரணமாகும். மேலும் இதில் பி.சி.ஏ.ஏ கிளை-சங்கிலி அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் புரதச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மதியம் அல்லது இரவு உணவிற்கு அரிசி உணவை சேர்த்துக்கொள்ளலாம்.

ஜாதிக்காயுடன் மஞ்சள் பால்: ஜாதிக்காய்ப் பொடியை சிறிது சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும். மஞ்சள்பொடி கலந்த பாலில் சிறிது ஜாதிக்காய்ப் பொடியை சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்லது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com