doctors explain on suddenly heart attack reason
மாரடைப்பு மரணங்கள்முகநூல்

மாரடைப்புகள் திடீரென்று ஏற்படுகின்றனவா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

மாரடைப்புகள் பெரும்பாலும் திடீர் மாரடைப்புகளாக இருப்பதில்லை என்றும் முந்தைய அறிகுறிகளை புறக்கணிப்பதுதான் மாரடைப்புகளுக்குக் காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Published on

மாரடைப்புகள் பெரும்பாலும் திடீர் மாரடைப்புகளாக இருப்பதில்லை என்றும் முந்தைய அறிகுறிகளை புறக்கணிப்பதுதான் மாரடைப்புகளுக்குக் காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மாரடைப்பினால் பாதிக்கப்படுவோரில் 50 விழுக்காட்டினர் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அறிகுறிகளைக் எதிர்கொண்டிருப்பார்கள் என்று இதயநோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். லான்செட் ஆய்விதழில் 2022 –ல் வெளியான ஒரு ஆய்வின்படி இந்தியாவில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் திடீர் மாரடைப்பு உயிரிழப்பின் விகிதம் 10 விழுக்காடைக் கடந்திருப்பதாக கூறுகிறது.

doctors explain on suddenly heart attack reason
மாரடைப்புமுகநூல்

அசாதாரண சோர்வு, மார்பில் கனம் அல்லது இறுக்கத்தை உணர்வது, மூச்சுவிடுவதில் சிரமம், உறக்கம் சார்ந்த சிக்கல்கள், உணவு சாப்பிட்ட பிறகு அசெளகரியமாக உணர்வது, கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் கனமாக இருப்பதுபோன்ற உணர்வு, அசாதாரண வியர்வை, படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது குமட்டல் ஏற்படுவது ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். எனவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை நாடி உரிய சிகிச்சை பெறுவது மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

doctors explain on suddenly heart attack reason
இளம் வயதில் மாரடைப்பு..! வீட்டில் இருக்க வேண்டியவை என்ன? | heart attack

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com