\
cooker gasket
cooker gasketamazon

சமயலறையில் அதிகம் செய்யப்படும் தவறு.. அசுத்தமான குக்கர் கேஸ்கட்டால் உணவு நச்சுத்தன்மை!

குக்கர் கேஸ்கட்டில் படியும் எண்ணெய், உணவுத் துகள்கள், ஈரப்பதம் – பாக்டீரியா, பூஞ்சை வளர்ச்சி மூலம் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Published on
Summary

வீட்டில் தினமும் பயன்படுத்தும் பிரஷர் குக்கரின் மூடியிலுள்ள ரப்பர் கேஸ்கட்டை பலர் கவனிக்காமல் விடுவதால், அதன் அடியில் எண்ணெய், உணவுத் துகள்கள், ஈரப்பதம் படிந்து பாக்டீரியா, பூஞ்சை வளர்ச்சி அதிகரிக்கிறது. அதிக வெப்பம் சில கிருமிகளை அழித்தாலும், கேஸ்கட்டில் இருக்கும் அசுத்தம் உணவில் கலந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உணவு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது.

நமது வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சமைத்த பிறகு நன்றாகக் கழுவி சுத்தம் செய்கிறோம். ஆனால், அதில் நாம் அனைவரும் கவனிக்கத் தவறவிடும் ஒரு முக்கிய பகுதி, அதன் மூடியில் இருக்கும் ரப்பர் கேஸ்கட். இந்தச் சிறிய ரப்பர் வளையத்தைச் சரியாகப் பராமரிக்காவிட்டால், அதுவே நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும் என ஆரோக்கிய வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

cooker
cookerweb

இந்த ரப்பர் வளையத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கு, சிறிய உணவுத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் மிக எளிதாகப் படிந்துவிடும். இதைத் தினமும் கழற்றிச் சுத்தம் செய்யாதபோது, அங்கு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை காளான்கள் பெருகித் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சமைக்கும்போது உருவாகும் அதிக வெப்பத்தில் பெரும்பாலான கிருமிகள் அழிந்துவிட்டாலும், கேஸ்கட்டில் இருக்கும் அசுத்தம் சமைத்த உணவில் கலந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற தற்காலிக உணவு நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை தவிர்க்க ஒவ்வொரு முறை சமைத்த பிறகும் கேஸ்கட்டைத் தனியாகக் கழற்றி, சோப் போட்டுக் கழுவி நன்றாகக் காயவைத்த பிறகே மீண்டும் பொருத்த வேண்டும். குக்கரைப் பயன்படுத்தாதபோது மூடியை இறுக்கமாகப் பூட்டாமல் லேசாகத் திறந்து வைப்பது ஈரப்பதம் தங்குவதைத் தடுக்கும். கேஸ்கட்டில் வெடிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ அதை உடனடியாக மாற்றுவது மிக அவசியம்.

cooker gasket
’தூங்குவதில் குற்ற உணர்ச்சி கொள்ளக்கூடாது; தூக்கம் ஆடம்பரம் அல்ல’ - மருத்துவர்களின் அறிவுரை என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com