உ.பி.: 20 கிராமங்களில் தொடங்கியது “டிஜிட்டல் டாக்டர் கிளினிக்” திட்டம்

"டிஜிட்டல் டாக்டர் கிளினிக்" என்ற தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையங்கள் 20 உத்தரபிரதேச கிராமங்களில் முதற்கட்டமாக தொடங்கப்படவுள்ளன.
 டிஜிட்டல் டாக்டர் கிளினிக்
டிஜிட்டல் டாக்டர் கிளினிக்முகநூல்

"டிஜிட்டல் டாக்டர் கிளினிக்" என்ற தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையங்கள் முதற்கட்டமாக 20 உத்தரபிரதேச கிராமங்களில் தொடங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தை தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலமையிலான அரசு தெரிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்file image

இதற்கான புதிய டிஜிட்டல் சாலை வரைபடத்தை வடிவமைத்து மாநிலத்தின் சுகாதார தேவையை நிறைவு செய்வதற்கான முயற்சியிலும் உத்தரபிரதேச அரசு இறங்கியுள்ளது என்று கூறலாம்.

கொரோனா போன்ற காலகட்டத்தில் மக்களுக்கு பெரிதும் உதவிய இத்தகைய தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையங்களை அடிப்படையாக கொண்டு இத்தகைய முயற்சியானது மேற்கொள்ளப்படவுள்ளது.

முதற்கட்டமாக லக்னோ, புலந்த் ஷெஹர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 20 கிராமங்களில் செயல்படுத்த உள்ளனர். இதற்காக ரூபாய் 1000 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஒபுது குழும மருத்துவமனைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இணையவழியில் வழங்கயுள்ள இச்சேவையின் மூலம் ஒவ்வொரு மையத்திலும் தகுந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பார். இதன் மூலம் குறைந்த விலையில் மருந்துகளும் குறைந்த கட்டணத்தில் அதாவது 30-40 ரூபாய் வரை செலவிலும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, கல்லீரல் செயல்பாடு, மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையானது வழங்கப்படவுள்ளது.மேலும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையானது 200- 300 ரூபாய் என்ற குறைந்த செலவிலும் செய்யப்படவுள்ளது.

 டிஜிட்டல் டாக்டர் கிளினிக்
டிஜிட்டல் டாக்டர் கிளினிக்முகநூல்

முதல்கட்டமாக 20 கிராமங்களின் செய்யப்படவுள்ள இந்த ”டிஜிட்டல் டாக்டர் கிளினிக்” மருத்துவ சேவை திட்டத்தில் ஏற்படும் குறைகள் சரிசெய்யப்பட்டு பின்னர் உத்திரப்பிரதேசத்தின் உள்ள 75 மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் தொடங்கப்படவுள்ளது.

 டிஜிட்டல் டாக்டர் கிளினிக்
ரத்த போக்கு to அனீமியா நோய்.. இளம்வயது கருத்தரித்தலில் இவ்வளவு பிரச்னையா? - டாக்டர் அருணா விளக்கம்

கூடுதலாக ஆம் ஆத்மி கட்சியால் டெல்லியில் தொடங்கப்பட்ட தெருமுனை கிளினிக்குகள் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் தற்போது உத்திரபிரதேசத்தில் துவங்கப்பட்டுள்ள ”டிஜிட்டல் டாக்டர் கிளினிக்” மருத்துவ ஆலோசனையானது சிறந்த வரவேற்பும் அதனால் வெற்றியை பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com