நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க... அதிக பலன் கிடைக்கும்!

நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க... அதிக பலன் கிடைக்கும்!
நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க... அதிக பலன் கிடைக்கும்!

இந்திய காய்கறிகள், பழங்கள் மற்றும் மசாலாக்களில் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். இவற்றில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகமாக இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. அதில் நெல்லிக்காயும் ஒன்று. இது முடி உதிர்வு, செரிமானம், நீரிழிவு, தைராய்டு மற்றும் கண்பார்வை தெளிவின்மை போன்ற அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது. இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஊறுகாய், உலர்ந்த பொடி, இனிப்பு நெல்லி, முரப்பா போன்ற பலவிதங்களில் எடுத்துக்கொள்ளலாம்.

நெல்லிப்பொடி: ஒரு டீஸ்பூன் நெல்லிப்பொடியை ஒடு டீஸ்பூன் தேன் அல்லது சுடுதண்ணீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

ஜூஸ்: 20மி.லி நெல்லிஜூஸை சுடுதண்ணீரில் கலந்து வெறும்வயிற்றில் குடிக்கலாம்.

லேகியம்: லேகியத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் நெல்லிக்காய். இதை சுடுதண்ணீரில் கலந்து காலையில் வெறும்வயிற்றில் குடிக்கலாம் அல்லது உணவுக்குப்பிறகு 2 மணிநேரம் கழித்து குடிக்கலாம்.

நெல்லிக்காய் முரப்பா மற்றும் ஊறுகாய்: சுத்தமான நெல்லிக்காயை முரப்பா அல்லது ஊறுகாயாக செய்து தினசரி உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

புளி நெல்லிக்காய்: தினசரி 1 அல்லது 2 நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய் கேண்டி: நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைத்து, தினசரி கேண்டிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com