World Heart Day | இதயத்தை காப்பாற்றும் 6 E பற்றி தெரியுமா?

நேத்து நல்லாதான் இருந்தாரு... திடீர்னு மாரடைப்புல இறந்துட்டாரு... ரொம்ப சின்ன வயசுதான்... இப்படி பேசுவதை கேட்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆம், அந்தளவிற்கு உயிர்க்கொல்லியாக இருக்கிறது இதய நோய்.
இதய நோய்கள்
இதய நோய்கள்pt web

அதிகரிக்கும் இதய நோய் உயிரிழப்புகள்

உலகளவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்வதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம், ஒரு லட்சத்துக்கு 272 ஆக உள்ளது. இது உலக சராசரியான 235ஐ விட அதிகம் என்பதால் இதன் வீரியத்தை உணரலாம். ஆனால், இதய ஆரோக்கியம் குறித்த புரிதல் இல்லாத சூழலில், மக்களின் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்டவை மரணத்திற்கு முக்கிய காரணங்களாக இருப்பதால், தங்கள் இதயங்களை கவனித்துக் கொள்வதை நினைவூட்டுவதே இந்நாளின் நோக்கமாகும். 2000ஆவது ஆண்டு முதல் உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.

உலக இதய தினம்
உலக இதய தினம்

இந்த ஆண்டுக்கான நோக்கம்...

"இதய EMOJI-ஐ பயன்படுத்துங்கள்; தெரிந்து கொள்ளுங்கள்" என்பதுதான் இந்த ஆண்டின் கருப்பொருளாகும். அதாவது, காட்சி மொழி நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருப்பதால், இன்று இளம் தலைமுறையினரிடையே தகவல் தொடர்பில் மிகவும் பிரலமாக விளங்கும் இதய EMOJI-ஐ பயன்படுத்தி, அதன்மூலம் மக்களின் கவனத்தை தக்கவைக்கவும், மொழி தடைகளைத் தாண்டிச் செல்லவும் இந்நாள் உதவும்.

இதய நோய்கள்
திடீர் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு கொரோனா பாதிப்பும் காரணமா...? இதய மருத்துவர் சொல்வதென்ன?

6E Formula

புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் உழைப்பின்மை போன்றவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம், இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் அகால மரணங்களில் இருந்து 80 சதவிகிதம் தவிர்க்க முடியும் என்கிறது, உலக இதய சம்மேளனம்.

எனவே உலக இதய தின நாளில், தனிநபர்களும் சமூகங்களும் இதய நோய்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீரான சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது, உப்பு, சர்க்கரை போன்றவற்றை குறைப்பது, மன அழுத்தத்திற்கான காரணிகளை கண்டறிந்து சரி செய்வது, போதுமான தூக்கம் போன்றவை நமது இதயம் பத்திரமாக இருப்பதற்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இதய மருத்துவர்கள்ன் 6E Formula என்ற ஒன்றை கூறுகின்றனர். அந்த 6Eக்கள்

- Eating (உணவு),

- Exercise (உடற்பயிற்சி),

- Enough sleep (உறக்கம்),

- Exit addiction (சில பழங்கங்களிலிருந்து மீள்வது),

- Take care of Emotional health (மனநலம்),

- Evaluate numbers Regularly (கட்டுப்பாட்டோடு இருப்பது).

உணவு - மனிதனின் இதயத்திற்கான பாதை அவனின் வயிற்றின் வழி என்பார்கள். ஒருவர் தான் உண்ணும் உணவின் கலோரிகளை அறிந்துகொள்வதில் இருந்து அது தொடங்குகிறது. ஒவ்வொரு உணவுக்கும் ஏற்றவாறு கலோரிகளின் அளவு மாறுபடும் என்பதால் உங்கள் உடலுக்கு ஏற்றார்போல சரியான அளவுள்ள சரிவிகித உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.

உடற்பயிற்சி- பொதுவான நடைபயிற்சியே நாளடைவில் மிகப்பெரிய பலனை அளிக்கலாம். நடைப்பயிற்சி என்பது எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்று. தொடர்ச்சியான நடைப்பயிற்சியின் மூலம் ரத்த ஓட்டம், செரிமானக் கோளாறு, நுரையீரல் சுவாசம் போன்றவை சீராகிறது. இதனைத் தாண்டி மருத்துவரின் ஆலோசனையின்படி வயதுக்கேற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் சிறப்பான பலன் அளிக்கும்.

இதய நோய்கள்
இதய நோய்கள் முதல் புற்றுநோய் வரை... - தீர்வுதரும் `வாவ்’ சூப்பர்ஃபுட்ஸ் உங்களுக்காக!

போதுமான தூக்கம் - வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது உட்பட பல்வேறு மாற்றங்கள் நமது தூக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தூக்கத்தை பொறுத்தவரை ஒவ்வொருவரும் தனது பணிச்சுமைகளைப் பொறுத்து தூக்கத்தை வகைப்படுத்திக் கொண்டாலும் தனி நபர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சில பழங்கங்களிலிருந்து மீள்வது - அடிமை என்பது மதுப்பழக்கத்திற்கோ அல்லது புகைப்பழக்கத்திற்கோ மட்டுமல்ல. கேமிங், சமூக ஊடகங்கள் போன்றவற்றை தொடர்ந்து உபயோகிப்பதும் அடிமை என்பதன் நீட்சிதான். ஆனாலும் ஒவ்வொரு போதைப் பொருளும் பல்வேறு இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, குறுகலான இரத்த நாளங்கள், பிடிப்புகள், உயர் இரத்த அழுத்தம், உடலின் சில பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் குறைதல் மற்றும் மாரடைப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தும். எனவே போதைப் பொருள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், மொபைல் அடிக்‌ஷன், கேம் அடிக்‌ஷன் போன்றவற்றை விட்டொழித்தல் நலம்.

இதய நோய்கள்
உலக இதய தினம்: இளவயதிலேயே இதய நோய் ஏற்படுவதற்கான 5 காரணங்கள் - பட்டியலிடும் மருத்துவர்

மனநலம் - நேர்மறையான உணர்வு, நம்பிக்கையுணர்வு, சிரிப்பு, பிற மகிழ்ச்சியான அனுபவங்கள் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பாதிப்புகளை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி கவனத்துடன் தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப்பயிற்சிகள் மூலம் மன நலனை மேம்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டுப்பாட்டோடு இருப்பது: ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, கொழுப்புச்சத்து, ட்ரை க்ளிசரைடு அளவுகளையும் கண்காணித்து அதை பாரமரிப்பதும் மிகப்பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி என வாழ்க்கை முறைகளில் மாற்றத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதயத்தை பலப்படுத்த முடியும். கவலை, மனச்சோர்வு போன்றவை மறைமுகமாக இதயத்தை பாதிப்பதால், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதயத்தை பாதுகாப்போம்... நலமுடன் வாழ்வோம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com