உங்க காலைப் பொழுது புத்துணர்ச்சியா இருக்கணுமா..? கறிவேப்பிலை டீ ட்ரை பண்ணுங்க..!

உங்க காலைப் பொழுது புத்துணர்ச்சியா இருக்கணுமா..? கறிவேப்பிலை டீ ட்ரை பண்ணுங்க..!
உங்க காலைப் பொழுது புத்துணர்ச்சியா இருக்கணுமா..? கறிவேப்பிலை டீ ட்ரை பண்ணுங்க..!

இந்திய உணவில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. சாம்பார், ரசம் முதல் லஸ்ஸி வரை அனைத்து உணவுகளிலும் இது சேர்க்கப்படுகிறது. இதன் தனித்துவமான நறுமணமும், சுவையும் உணவுக்கு கூடுதல் சுவையை வழங்குகிறது. சுவை மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, ஈ, ஆன்டி ஆக்ஸிடன்டுகள், காப்பர், இரும்பு, நார்ச்சத்து மற்றும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது.

உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை

உடலில் சேரும் நச்சுக்களை அகற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்களில் கறிவேப்பிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால்தான் நிபுணர்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் கறிவேப்பிலையை முக்கியமாக பரிந்துரைக்கிறார்கள். ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை நிறைந்துள்ள கறிவேப்பிலை, ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் குடலின் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.

தினமும் காலையில் கறிவேப்பிலை ஜூஸ்/டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார் மேக்ரோபயாடிக் ஊட்டச்சத்து நிபுணரும், சுகாதார பயிற்சியாளருமான ஷில்பா அரோரா.

குளிர்காலத்தில் காலையில் தினமும் கறிவேப்பிலை டீயைக் குடித்தால் உடலில் ஊட்டச்சத்துகள் சேர்வதுடன், புத்துணர்ச்சியும் பெறலாம் என்கிறார் ஷில்பா.

தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 8-10 இலைகள்
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் -2-3 கப்
தேன்/ எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்

செய்முறை
இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சுத்தப்படுத்தி அடுப்பை சிம்மில் வைத்து 15-20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு மூடியிட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்பு வடிகட்டி அதில் தேன் அல்லது எலுமிச்சைச் சாறு(வேண்டுமானால் இரண்டும் சேர்த்துக் கொள்ளலாம்)சேர்த்துப் பருகலாம்.

தினமும் இந்த டீயைக் குடித்துவர உடலின் புத்துணர்ச்சி அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இயங்கவைப்பதால் உடல் எடையும் குறைவதைக் கண்கூடாகக் காணலாம் என்கிறார் ஷில்பா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com