தம்பதிகள், காதலர்கள் தங்களுடைய உறவை காப்பாற்றிக் கொள்ள பல வழிகளில் மெனக்கெடுவார்கள். ஆனால், ஏதேனும் ஒரு கட்டத்தில் சில சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் வருவது தவிர்க்க முடியாதவையாக இருக்கும்.
இருப்பினும் துணையுடனான வேறுபாடுகளைத் தீர்க்க தொடர்ந்து பணியாற்றவும் முயலாமல் இருக்கமாட்டார்கள். அதற்கான முக்கியமான தீர்வுகளில் ஒன்றாக இருக்கிறது Couple Therapy. இந்த தெரப்பி அந்த காதலர்களையோ அல்லது தம்பதிகளையோ ஒருவருக்கொருவர் நெருக்கமாக வளர உதவியாக இருக்கும். இதன் மூலம் பிரச்சனையின் மூல காரணத்தை புரிந்துகொள்ளவும் முடியும்.
அதில் சில வழிகளை காணலாம்:
1. Reflective listening
உங்களுடைய துணை தவறாகத்தான் இருக்கிறார் என்பதை அவர்களுக்கு உணர வைப்பதற்கு பதிலாக அது உங்களை எப்படி காயப்படுத்தியிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணரச் செய்யலாம். அதாவது எப்போது உன்னால்தான் என சொல்வதற்கு பதில் நான் என சுட்டிக்காட்டிங்கள். உதாரணமாக நீ இதை செய்வது தவறாக இருக்கிறது என்பதற்கு பதில் நீ இதை செய்வது எனக்கு கஷ்டமாக இருக்கிறது எனக் கூறலாம்.
2. Find Deep Topics To Talk About
கருத்தியல்கள், கொள்கைகள் பற்றி துணையுடன் இணைந்து பேசும் போது அவர்களுடனான தொடர்பை ஆழப்படுத்த மேலும் உதவும். அதன்படி ஒருவருக்கொருவர் ஆழமாக, பரஸ்பரமாக புரிந்துக்கொள்ள தத்துவம், வரலாறு, அரசியல், கலாசாரம், ஆன்மிகம் போன்றவை குறித்து பேசலாம்.
3. Express Appreciation
துணையின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பது பொதுவான புத்தியாக இருந்தாலும், அவர்கள் செய்யும் நற்செயல்களை அடிக்கடி பாராட்டுவதும் முக்கியமானது. உங்கள் காதல் உறவை நீங்கள் விமர்சிப்பதை விட அவர்களைப் பாராட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது அவர்களிடையே தான் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை உணர செய்யும்.
4. The 6-second Kiss
பிணக்குக்குள் இருக்கும் காதல் உறவை மீட்டெடுக்க இந்த முறை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என மருத்துவர் John Gottman என்பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் ஒரு நபர் தனது துணையை 6 நொடிகளை கடந்து முத்தமிடும் போது மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் நிலை குறையும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறிய சண்டைகள் தூசாகி தம்பதிகள் அல்லது காதலர்களுக்குள் நல்ல கனெக்ஷன் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
5. Have fun
உடலுறவு மற்றும் கவலையில் கவனம் செலுத்துவதை விட, Intimacy-ல் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் துணையுடன் வேடிக்கையாக பொழுதை கழியுங்கள். உங்களையோ அல்லது துணையையோ உடலுறவுக்கு கட்டாயப்படுத்தாதீர்கள்.
6. Make elaborate plans
உங்கள் மீதான ஆர்வத்தை மேம்படுத்த உங்கள் துணைக்கு திடீர் பரிசுகளை கொடுத்தோ அல்லது இரவு டின்னருக்கு அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்துங்கள். அவர்களுடன் நேரம் கழித்து மெதுவாக அவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுங்கள்.