மழைக்காலத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது - வழிமுறைகள் வெளியீடு

மழைக்காலத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது - வழிமுறைகள் வெளியீடு

மழைக்காலத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது - வழிமுறைகள் வெளியீடு
Published on
மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மழை, வெள்ளக் காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட 20 நொடிகள் முறையாக அடிக்கடி சோப்பு உபயோகப்படுத்தி கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஆற வைத்து பருகவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும். பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும். திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை/மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால். உப்பு சர்க்கரை கரைசல் (ORS Solution) மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும்; உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே வீட்டில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகைப்பிரித்து தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்" என அறிவுறித்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com