கான்டாக்ட் லென்ஸ், கண் கண்ணாடி, லேசர் கிசிச்சை - கண்பார்வை பிரச்னைகளும், தீர்வுகளும் - ஓர் பார்வை

கான்டாக்ட் லென்ஸ் கொண்டும், கண் கண்ணாடிகளை கொண்டும், லேசர் கிசிச்சையை கொண்டும் இதனை தற்காலிமாக கண் பார்வை குறைபாடை சரிசெய்து கொள்ளலாம்.
கான்டாக்ட் லென்ஸ்,கண் கண்ணாடி,லேசர் கிசிச்சை
கான்டாக்ட் லென்ஸ்,கண் கண்ணாடி,லேசர் கிசிச்சைமுகநூல்

கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று. சரியான பார்வைத்திறன் இல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும். சரியான பார்வை திறன் இல்லாமல் தங்களது அன்றாட வேலையை கூட செய்ய முடியாமல் கடினப்படும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். எப்படி நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் என்பது பற்றிய விரிவான தகவல்களை காணலாம்.

1. மையோபியா அதாவது கிட்டப்பார்வை

ஒருவரால் தொலைதூரத்தில் உள்ளப் பொருட்களைப் பார்க்க முடியாமல் அருகில் உள்ளவற்றை மட்டும் பார்க்க முடிந்தால் அதனை மையோபியா அதாவது கிட்டப்பார்வை என்று அழைக்கிறோம்.

 மையோபியா
மையோபியாமுகநூல்

2. ஹைபரோபியா அதாவது தூரப்பார்வை

ஒருவரால் தொலைதூரத்தில் உள்ளப் பொருட்களை மட்டும் தெளிவாகப் பார்க்க முடிந்து அருகில் உள்ள ஒரு ஊசியை கோர்க்கவோ அல்லது புத்தகத்தை படிக்கவோ முடியவில்லை என்றால் அதனை ஹைபரோபியா அதாவது தூரப்பார்வை என்று அழைக்கின்றோம்.

ஹைபரோபியா
ஹைபரோபியாமுகநூல்

3. சிலருக்கு அருகில் உள்ளவற்றையும் மற்றும் தூரத்தில் உள்ளவற்றையும் நன்றாக பார்க்கும் திறன் இருக்கும்.

Presbyopia
Presbyopiaமுகநூல்

வெள்ளெழுத்து/சலேஸ்வரம்

ஆனால் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் படிப்பதில் சிரமம் ஏற்படும். இதனை வெள்ளெழுத்து/சலேஸ்வரம் அதாவது Presbyopia என்று அழைப்பர்.

ஆட்டோ ரிஃப்ராக்டோ மீட்டர் (Auto Refractometer)

  • தொலைதூரப் பார்வைக்கான இயல்பான பார்வை என்பது 6/6 அல்லது 20/20 ஆகும்.

  • கிட்டப்பார்வைக்கான இயல்பான பார்வை என்பது N6 ஆகும்.

இவையெல்லாம் பார்வை விளக்கப்படங்களில் உதவி கொண்டு சரிபார்க்கப்படுகிறது. பார்வையில் உள்ள பிரச்னைகளை கண்டறிய *ஆட்டோ ரிஃப்ராக்டோ மீட்டர் (Auto Refractometer) என்ற உபகரணமானது பயன்படுத்தப்படுகிறது. இதனால், பார்வை குறைபாடானது சரிசெய்யப்படுகின்றது. மேலும், பின்னர் பார்வை குறைபாடை மேம்படுத்துவதற்கான வழிகளையும் பரிந்துரை செய்கின்றது.

பார்வை குறைப்பாடுடைய ஒருவர் பின்வரும் இந்த மூன்று சிசிச்சை முறையை பயன்படுத்தி பார்வை குறைபாட்டை சரிசெய்து கொள்ளலாம்.

1. கண்ணாடி அணிவது

2. கான்டாக்ட் லென்ஸ்கள் அணிவது.

3. ஒளிவிலகல் பிழையை முழுமையாக சரிசெய்ய லேசரை கொண்டு கண் சிகிச்சை செய்து கொள்வது.

லேசர் முறையின் மூலம் கண் குறைப்பாட்டை சரிசெய்து கொள்ளலாம் என்றால் இந்த இரண்டு முக்கியமான விதிமுறைகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

லேசர்
லேசர்முகநூல்
  • 18 வயதுக்குப் பிறகுதான் லேசர் சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும்.

  • குறைந்தது 1 வருட காலத்திற்கு கண் பார்வைத்திறன் என்பது ஒரே நிலைமையில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக -4 என்றால் 1 வருடம் -4 என்ற பார்வை திறனையே உடையதாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் எல்லாம் சரியாக இருந்தால் லேசர் சிகிச்சை முறையை கொண்டு கண் பார்வை குறைப்பாட்டை சரிசெய்து கொள்ளலாம்.

பல்வேறு வகையான லேசிக் நடைமுறைகள் உள்ளன

  • ஃபெம்டோசெகண்ட் லேசிக் லேசர்

  • எபி லேசிக்

  • மடல் குறைவான நடைமுறை (ஃபிலாப் லெஸ் )

ஒருவருக்கு மிக அதிக ஒளிவிலகல் பிழை ஏற்பட்டால் எ.கா. - 18 அல்லது + 9.00 போன்றவையாக இருந்தால் ஒளிவிலகல் லென்ஸ் பரிமாற்றம் எனப்படும் கண் அறுவை சிகிச்சை முறையைச் செய்து கொள்ளலாம்.

கான்டாக்ட் லென்ஸ்கள்

1. கான்டாக்ட் லென்சை பயன்படுத்துவதற்கு முன்னதாக எப்படி அதனை கையாள வேண்டும், கார்னியரில் பொருத்த வேண்டும் போன்றவற்றை முதலில் அறிந்து அதனை பழக வேண்டும்.

கான்டாக்ட்  லென்ஸ்கள்
கான்டாக்ட் லென்ஸ்கள்முகநூல்

பல்வேறு வகைகளில் கிடைக்கும் லென்ஸின் வகைகள்:

1. மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது

2. தினசரி மாற்றும் முறையில் கான்டாக்ட் லென்ஸ்,

3. காலாண்டுக்கு ஒருமுறை மாற்றக்கூடிய கான்டாக்ட் லென்ஸ், என்று நமது தேவைக்கு ஏற்றவாறு கான்டாக்ட் லென்ஸ், கிடைக்கப்பெறுகிறது.

எப்படி யெல்லம் கையாள் வேண்டும்.

1) கான்டாக்ட் லென்ஸ்கள் ஒரு நாளைக்கு 8-10 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து அணியக்கூடாது.

2) கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னரே லென்ஸ் பெட்டியை திறந்து, கான்டாக்ட் லென்ஸை கரைசலை பதியவைத்து மெதுவாக அவற்றில் தேய்த்து பின் கருவிழியில் ஆள்காட்டி விரலில் உதவிக்கொண்டு கண்ணில் பதிய வைக்க வேண்டும்.

3) கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவி அதன் பின்னர் கண்ணில் இருந்து கான்டாக்ட் லென்ஸ், அகற்றி லென்ஸ் பெட்டியில் உள்ள கரைசலை புதிய கரைசலாக மாற்றி கான்டாக்ட் லென்ஸை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதை கான்டாக்ட் லென்ஸ், பெட்டிக்குள் பத்திரப்படுத்தி விடலாம்.

4) லென்ஸ்களை எப்பொழுதும் அழுக்கு கைகளை கொண்டு பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் இது கார்னியாவில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com