மெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க!

மெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க!
மெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க!

காலையில் எழுந்தவுடன் எந்த உணவை சாப்பிடவேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். சிலர் உலர் பழங்களை சாப்பிடுவார்கள். சிலருக்கு முதலில் ஒரு கப் காபி அல்லது டீ குடித்தே ஆகவேண்டும் என நினைப்பார்கள். சிலர் வயிறு நிறைய காலை உணவை சாப்பிட்டு விடவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்துவிட்டு வெறும் வயிற்றில் கொஞ்சம் சாப்பிட்டாலும் நிறைய ஊட்டச்சத்து சேரும் விதமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதாவது மெட்டபாலிஸத்தை அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்கிறனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

ஊறவைத்த பாதாம்

தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது நல்லது என நம் அனைவருக்கும் தெரியும். ஆரோக்யத்தை மேம்படுத்த தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. 5 லிருந்து 10 வரை பாதாம் பருப்புகளை இரவே ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தும். பாதாமின் தோலில் டானின் என்ற சத்து உள்ளது. இது ஊட்டச்சத்து உடலில் சேருவதைத் தடுக்கிறது. இதனால் ஊறவைக்கும்போது எளிதில் தோல்நீக்கி சாப்பிட முடிகிறது.

பேரீச்சை

ஒருநாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஓட தேவையான உடனடி ஆற்றலைக் கொடுக்கும் சக்தி பேரீச்சைக்கு உண்டு. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானப் பாதைக்கு தேவையான நீரைக் கொடுக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் வருவதைத் தடுக்கிறது. பேரீச்சையில் இருக்கும் அதிக அளவு பொட்டாசியம் வயிற்றுப்போக்குக்கு சிறந்த மருந்து.

சியா விதைகள்
இந்த சிறிய விதைக்குள் புரதத்தின் மூலமான கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் பி போன்ற ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது. ஒரு ஸ்பூன் விதையை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்.

பப்பாளி
பொதுவாக பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என சொல்வார்கள். ஆனால் பப்பாளியில் சுத்தப்படுத்தும் பண்புகள் இருப்பதால் காலையில் சாப்பிட வயிற்றை சுத்தப்படுத்தும். மேலும் குடலின் இயக்கத்தை சீராக்கும். பப்பாளி சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு வேறு எதையும் சாப்பிட வேண்டாம். பப்பாளி இதய நோயை வரவைக்கும் கொழுப்புகளைக் குறைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com