ஜிப்மர்: கையிருப்பிலுள்ள மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க சுற்றறிக்கை

ஜிப்மர்: கையிருப்பிலுள்ள மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க சுற்றறிக்கை
ஜிப்மர்: கையிருப்பிலுள்ள மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க சுற்றறிக்கை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரிமேட்டில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மாதந்தோறும் நோயாளிகளுக்கு வழங்கி வந்த இலவச மாத்திரைகள் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர், அனைத்து துறைத்தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஜிப்மர் மருந்தகத்தில் கிடைக்கும் மாத்திரைகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய மருந்தை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளுமாறு தனிச்சீட்டில் எழுதி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் நிலவும் மருந்து பற்றாக்குறையால், ஏழை நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com