சீனாவின் சந்தை
சீனாவின் சந்தைகோப்புப்படம்

“சீனாவின் வூஹான் சந்தையில் இருந்துதான் COVID-19 தொற்று ஆரம்பம்பித்துள்ளது” - ஆராய்ச்சியாளர்கள்!

COVID-19 தொற்றுநோய் சீனாவின் சந்தையிலிருந்து ஆரம்பித்தது என நேச்சர் மருத்துவ இதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டு இருக்கிறது.
Published on

COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் சீனாவின் வூஹானில் உள்ள ஒரு சந்தையில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி வூஹானில் உள்ள விலங்குகள் வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொற்றுநோய் விலங்குக்கு ஏற்பட்ட காரணத்தை அவர்களால் உறுதிபடுத்த முடியவில்லை.

கோவிட் தொற்று நொய் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்த நேரத்தில், இந்த நோயானது சீனாவின் ஹுவானன் கடல் உணவு விற்பனை சந்தையிலிருந்து தொடங்கியதாக பல உலக நாடுகள் கூறிவந்தன. ஒரு சிலர் நோய் தாக்கப்பட்ட மக்கள் சிலர் சந்தைக்கு வந்து அதை மற்றவர்களுக்கு பரப்பி விட்டதாக கூறினர்.

ஆனாலும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் கோவிட் பரவியது சந்தையில் இருக்கும் விலங்குகளால்தான் என்றனர். இருப்பினும் யாராலும் இது எதையும் உறுதிபடுத்த முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்திய ஒரு ஆராய்ச்சியில், COVID-19 தோன்றிய நாட்களில் வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் வூஹானில் சந்தையில் இருந்தன என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியா, பெர்லினில் உள்ள மருத்துவமனையின் வைராலஜிஸ்ட் கூறுகையில், “SARS-CoV-2 தொற்றுநோய்க்கான தோற்றத்தில், ஹுவானன் சந்தையுடன் தொடர்பு உள்ளது” என்றுள்ளனர்.

கனடாவின் சஸ்கடூனில் உள்ள சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் ஏஞ்சலா ராஸ்முசென், என்பவர், SARS-CoV-2 தாக்கிய விலங்குகளின் மரபணு தரவுகளை ஆய்வு செய்தார். அதில், அமெரிக்க மிங்க் (Neogale vison), எர்மின் (Mustela erminea), முகமூடி அணிந்த பனை சிவெட்டுகள் (Paguma larvata), ரக்கூன் நாய்கள் (Nyctereutes procyonoides), சிவப்பு நரிகள் (Vulpes vulpes) மற்றும் பெரிய பன்றி பேட்ஜர்கள் (ஆர்க்டோனிக்ஸ்) ஆகியவற்றில் வைரஸ் தாக்குதல் இருப்பதை உறுதிசெய்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி 1, 2020 அன்று ஹுவானன் சந்தை மூடப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, பெய்ஜிங்கில் உள்ள சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சீனா CDC) ஆராய்ச்சியாளர்கள் குழு ஹுவானன் சந்தைக்குச் சென்றது. அங்கிருந்த ஸ்டால்கள், சுவர்கள், தொட்டிகள், கழிவுநீர் கிணறுகள் மற்றும் விலங்குகளிடமிருந்து மாதிரிகளை அக்குழு சேகரித்தது. அவற்றை தங்களின் ஆய்விற்காக ஸ்வாப்களில் இருந்து டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏவை வரிசைப்படுத்தி, அந்தத் தரவை ஒரு மரபணு தரவுத்தளத்தில் டெபாசிட் செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதுதான் தற்போது ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இவையாவும் மருத்துவ ஆய்வு இதழான Nature-ல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com