“கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் மாரடைப்புகள்.. தடுப்பூசி காரணமா?” - மத்திய அரசு விளக்கம்

“கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் மாரடைப்புகள்.. தடுப்பூசி காரணமா?” - மத்திய அரசு விளக்கம்
“கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் மாரடைப்புகள்.. தடுப்பூசி காரணமா?” - மத்திய அரசு விளக்கம்

“திடீர் மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணம் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை” என்று மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

இன்று நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், “கொரோனா காலத்திற்குப் பிறகு திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா?” என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், “கொரோனா காலத்திற்குப் பிறகு அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பிறகு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வஆதாரமும் இல்லை” என்றுள்ளார்.

மேலும் இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com