மருக்கள் எவ்வாறு உருவாகின்றன? ஏன் அதை இப்படியெல்லாம் கையாளக் கூடாது.. சித்த மருத்துவம் சொல்வது என்ன?

ஆங்கில மருத்துவம் மட்டுமன்று சித்தமருத்துவ முறையிலும் மருக்களை நம்மால் நீக்க முடியும். வரும் முன் காப்பது நல்லது, வந்தாலும் அதை கையாளும் முறையையும் கட்டாயம் அறிந்திருப்பது என்பது நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு சிறந்த வழி என்று கூறலாம்.
சித்தமருத்துவம் நோக்கில் மரு என்பது
சித்தமருத்துவம் நோக்கில் மரு என்பது Twitter

மரு - முகம், கை, கால், கழுத்து, அக்குள் என்று உடலின் பல பகுதிகளிலும் பரு போன்ற வடிவில் உருவாகுத்தொடங்கி, பின் பெரிதாகிக்கொண்டே போகும் முக்கிய தொந்தரவு. மருக்கள், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அவற்றை போக்க என்னதான் செய்வது என்ற குழப்பம் மரு உள்ளவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். இதற்காக யூ-ட்யூப் வீடியோக்களை பார்த்து வீட்டு மருத்துவம் செய்யும் பலரும் இங்குண்டு. ஆனால் உரிய நிபுணர் ஆலோசனை மட்டுமே மருக்களுக்கு தீர்வு.

ஆங்கில மருத்துவம் மட்டுமன்றி சித்தமருத்துவ முறையிலும் மருக்களை நம்மால் நீக்க முடியும். அது எப்படி சாத்தியம், மரு என்பது என்ன, அவை எவ்வாறு உருவாகின்றன, எப்படி கையாள கூடாது என்பது எல்லாம் நமக்கு விளக்குகிறார் கோவை இராமநாதபுரத்தில் அமைந்துள்ள மருகு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர். செவ்வேள்.

மருக்கள் எவ்வாறு உருவாகின்றன?

“உடலில் உள்ள வெப்பத்தின் மிகுதியால் உடலில் உண்டாகும் கழிவுகள், அழுக்குகள், LDL எனப்படும் மோசமான கெட்ட கொழுப்புகள் மிகுதியாகும்போது, அவை மருவாகிறது. நாம் பயன்படுத்தும் முகப்பவுடர், கிரீம்கள், உடலின் மேற்புரத்தில் உள்ள துவாரங்களை அடைத்து வியர்வை மற்றும் வெப்பம் வெளியேற முடியாமல் செய்யும். அப்படியான சூழலிலும் மருகுகள் உருவான்றன”

LDL கொலஸ்ட்ரால்
LDL கொலஸ்ட்ரால்Twitter

12 வகை மருகுகள்:

“மருக்களை தமிழ் சித்தர்கள் 12 வகையாக பிரித்துள்ளனர். பொதுவாக மருகுகள் வாழ்நாள் முழுவதும் நீங்காமல் இருகின்றது. இவற்றின் நாள்பட்ட வளர்ச்சியென்பது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆகவே உரிய சிகிச்சையை பெற்று மருக்களை நீக்கிக்கொள்ள வேண்டும்”

12 வகைகள்
12 வகைகள்Twitter

பல்வேறு சிகிச்சை முறை:

“ஆபரேஷன் செய்து மருகை நீக்குவது, லேசர் சிகிச்சையை வைத்து மருக்களை நீக்குவது என்று பல சிகிச்சை முறைகள் தற்போது வந்துவிட்டன. இருப்பினும், இந்த சிகிச்கை முறைகள் மருக்களின் வளர்ச்சியை வேரோடு குணமாக்குவதில்லை. அதாவது, வெளியில் தெரியும் மருக்களை அழிக்குமே தவிர, அந்த இடத்தில் அவை மீண்டும் உருவாகாமல் இருக்க வழிசெய்யாது. ஆகவே மருக்களை நீக்கிய பின்னும் கவனம் தேவை.

கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, பொதிகை மலைகளில் கிடைக்கும் சித்த மூலிகைகள் மூலம் மருக்களை குணப்படுத்தலாம். மேலும், அந்த மூலிகைகளை கொண்டு மருந்து தயாரிக்கப்பட்டு, அவை மருகின் வேர் வரை சென்று அதனை முழுமையாக அகற்றவும் உதவும். இவை அனைத்தையும் உரிய சித்த மருத்துவரிடம் கேட்டுதான் செய்ய வேண்டும். உரிய சான்று பெறாத நபரிடம் செய்தால், சிக்கல்”

பல்வேறு சிகிச்சை முறை
பல்வேறு சிகிச்சை முறைTwitter

மருக்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

“உடல் வெப்பநிலை அதிகமாவதே மருக்களுக்கு காரணமாக அமைகின்றது. ஆகவே உடல் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவு இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, உடலின் வெப்பநிலையை அதிகமாக்கும் உணவுவகைகளை சாப்பிடுவது, எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, துரித உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

மருக்களை நீக்க இதெல்லாம் செய்யாதீங்க...

“மருகை சிலர் முடி, நூல் போன்றவை கட்டி இழுப்பதுண்டு. இதன் மூலம் மரு உதிர்ந்து விடும்தான். ஆனால் அதேயிடத்தில் மரு மீண்டும் வளரும். மேலும் மருவில் இருந்து வரக்கூடிய நீர், ரத்த திசுக்கள் போன்றவை அருகிலுள்ள இடத்தில் மரு பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆகவே அதை செய்யக்கூடாது.

Avoid
Avoid Twitter

இதேபோல பேக்கிங் சோடா, பூண்டு, இஞ்சி போன்றவற்றின் சாறுகளை மருகின் மீது வைப்பதன் மூலம் அது கீழே விழுந்தாலும் அந்த இடத்தில் எரிச்சல், வடு, ஆராத புண் ஏற்படும். எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

- Jenetta Roseline S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com