தூக்கம் வரவில்லையா? இனி மாத்திரை வேண்டாம்.. இதை செய்தால் போதும்! டாக்டர்ஸ் சொல்லும் சிம்பிள் ஐடியா!
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தூக்க மாத்திரைக்கு மாற்றாக நெற்றியில் ஒட்டும் ‘நியு ஸ்லீப்’ பேட்ச் உருவாக்கியுள்ளனர். இது மிக மென்மையான அல்ட்ராசவுண்ட் அலைகளை மூளைக்கு அனுப்பி ரெம் தூக்கத்தை தூண்டுகிறது. 28 பேரிடம் நடந்த ஆய்வில், இதைப் பயன்படுத்தியவர்கள் ரெம் தூக்க நிலையை சராசரியாக 43 நிமிடங்கள் விரைவாக அடைந்து, ரெம் தூக்கத்தில் 16 நிமிடங்கள் கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது.
தூக்கம் வரவில்லை என்றால் இனி மாத்திரை வேண்டாமா? நெற்றியில் பேட்ச் (PATCH) ஒட்டினாலே, அழ்ந்த தூக்கம் வர உதவும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்..
நாம் தூங்கும்போது நம் மூளை பல கட்டங்களில் ஓய்வெடுக்கிறது .அதில் ரெம் ஸ்லீப் (REM SLEEP) என்பது மிகவும் முக்கியமான கட்டம். இந்த ரெம் (REM) தூக்கத்தின்போதுதான் கனவுகள் அதிகம் வரும். மூளை நினைவுகளை ஒழுங்குப்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்து மீளவும் இது உதவுகிறது. ரெம் தூக்கம் சரியாக இல்லையென்றால், மறதி, சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதற்காகவே அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நியு ஸ்லீப் (NEU SLEEP) என்ற மென்மையான பேட்ச்சை (PATCH) உருவாக்கியுள்ளனர். இந்த பேட்ச்சை நெற்றியில் ஒட்டிக்கொண்டு தூங்கும்போது, மிகவும் மென்மையான அல்ட்ராசவுண்ட் (uLTRASOUND) அலைகள், மூளையின் ரெம் தூக்கத்தை தூண்டுவதாகவும், 28 பேரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில், இந்த பேட்ச்சை பயன்படுத்தியவர்கள் ரெம் ( REM) தூக்க நிலையை சராசரியாக 43 நிமிடங்கள் விரைவாக அடைந்ததுடன், ரெம் தூக்கத்தில சுமார் 16நிமிடங்கள் கூடுதலாக இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

