கீமோதரப்பி மூலம் கேன்சர் கட்டிகளை கொல்லும் புதிய மாத்திரை! நம்பிக்கை அளிக்கும் புதிய ஆய்வு முடிவு!

பல ஆண்டுகளாக கேன்சர் கட்டிகளை கொல்வதற்காக பல தரப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேன்சர் கட்டிகளை கொல்லும் புதிய முயற்சியானது அமெரிக்காவின் சிட்டி ஹோப் விஞ்ஞானிகளால் தற்போது சாத்தியமாகியுள்ளது.
Cancer killing Pill
Cancer killing PillTwitter

மனிதனுக்கு பிறப்பு, இறப்பு என்று காலங்கள் இருப்பது போல, நம் உடலில் உள்ள செல்களுக்கும் பிறப்பு, இறப்பு என்பதெல்லாம் இருக்கிறது. இந்த நிகழ்வுகளின் தொடர் போக்கு தவறும் போதுதான் உடலில் நோய் என்பது ஏற்படுகின்றது. இப்படி உருவாகும் நோயில் ஆண்டாண்டு காலமாக பலரின் உயிரை காவு வாங்கி கொண்டிருப்பதுதான் புற்றுநோய் . ஆரம்பகாலத்தில் இந்த நோய்யை கண்டறிந்தால் அதனை குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதன் அறிகுறி அறியாமல் முற்றிய நிலையில் தங்களது உயிரை புற்றுநோய்க்கு பறிகொடுத்தவர்களும் உண்டு.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனமான சிட்டி ஆஃப் ஹோப்பின் விஞ்ஞானிகள், AOH1996 என்ற மூலக்கூறின் மூலமாக புற்றுநோய்யை கொல்லும் ஒரு மாத்திரையை  தங்களது முதற்கட்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த புற்றுநோய் ஆராய்ச்சியின் முடிவு பல மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று கூறலாம். இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய்க்கான மாத்திரையானது குறிப்பாக புற்றுநோய்கட்டிகளை மட்டும் குறி வைத்து அழிக்கின்றது. ஆரோக்கியமான செல்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

இதற்கு முன்பாக 1996 ஆம் ஆண்டு பிறந்த அன்னா ஒலிவியா ஹீலி (AOH) என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு  AOH1996 மூலக்கூறின் மூலம்  புற்றுநோய் சிகிச்சையானது செய்யப்பட்டது. ஆனால் அது தோல்வி அடைந்த நிலையில் இடைவிடாத முயற்சியால் தற்போது ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் ஆய்வாக இந்த முதற்கட்ட சோதனையானது நிகழ்ந்துள்ளது என்று கூறலாம்.

AOH1996  Molecule
AOH1996 MoleculeTwitter

எந்த மாத்திரை எப்படி செயல்படுகின்றது?

 AOH1996 என்பது ஒரு "பனிப்புயல்"(snowstrom)  போல  புற்றுநோயால்  பாதிக்கப்பட்ட  செல்களைத் தேர்ந்தெடுத்து அதனை முற்றிலும் மூடிவிடுகிறது. அதுமட்டுமல்லாது உடலின் மற்ற பகுதியில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை

PCNA - AOH1996-Snowstrom
PCNA - AOH1996-SnowstromTwitter

மார்பகம், மூளை, கருப்பை, கர்ப்பப்பை வாய், தோல் மற்றும் நுரையீரல் இப்படி பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு முன் மருத்துவ ஆய்வானது (Preclinical studies) நடத்தப்பட்டு முதற்கட்ட சோதனையானது வெற்றியை அளித்துள்ளது. இந்த AOH1996 ஆனது உடலில் எந்த ஒரு நச்சுத்தன்மையையும்  ஏற்படுத்தாமல் புற்றுநோய்கட்டியின்  வளர்ச்சியை மட்டுமே அழிக்கிறது. ”PCNA என்ற புரதத்தை அழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த சிகிச்சை முறையை யாரும் குறிவைத்ததில்லை, ஏனெனில் புற்றுநோயை ஏற்படுத்தும் புரதத்தை அழிப்பது என்பது நடக்காத ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் சிட்டி ஆஃப் ஹோப் ஆராய்ச்சி மையம் இதனை சவாலாக எடுத்து இதில் வெற்றியை கண்டுள்ளது” என்று சிட்டி ஆஃப் ஹோப்பின் மூலக்கூறு நோயறிதல் மற்றும் பரிசோதனை சிகிச்சைகள் துறையின் இணை ஆராய்ச்சி பேராசிரியர் Long Gu கூறினார்.

இந்த ஆராய்ச்சி லட்சக்காண மக்களின் மனதில் நிச்சயமாக ஒரு நம்பிக்கையை உருவாக்குவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 - Jenetta Roseline S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com