வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் தெரியும்... அது என்ன மருத்துவக் கடன்? எப்படி பெறுவது அதை?

அரசு வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றை பலரும் வாங்கியிருப்போம்.. அதன் தொடர்ச்சியாக அறிமுகமாகியுள்ளது மருத்துவர் கடன்.
மருத்துவக் கடன்
மருத்துவக் கடன்முகநூல்

பொதுத்துறையைச் சேர்ந்த கனரா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் மருத்துவச் செலவுகளை சமாளிக்க CANARA Heal என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவக் காப்பீட்டு தொகையை விட கூடுதலாக மருத்துவச் செலவு ஏற்படும்போது இந்த திட்டம் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

Canara Heal
Canara Heal

இந்த மருத்துவக் கடனுக்கு 11.55 சதவிகிதம் முதல் 12.30 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்படும் என கனரா வங்கி தெரிவித்துள்ளது. இதுபோன்ற மருத்துவக் கடன் சேவைகளை ஏற்கனவே வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், தற்போது அரசு வங்கியும் இந்தச் சேவையை வழங்க தொடங்கியுள்ளது.

மருத்துவக் கடன்
2050-ல் இந்தியர்களின் பிறப்பு விகிதம் சரிய வாய்ப்பா? எச்சரிக்கும் நிபுணர்கள்! காரணம் என்ன?

இதுமட்டுமல்லாமல் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் பெண்களுக்கு CANARA ANGEL திட்டம் மூலம் கேன்சர் கேர் பாலிசி, முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட தனிநபர் கடன், டேர்ம் டெபாசிட்களுக்கு கடன் வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படும் எனவும் கனரா வங்கி கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com