“உலகில் அடுத்து வரவுள்ள தொற்றுநோய் தவிர்க்க முடியாத ஒன்று” - பிரிட்டன் விஞ்ஞானி தந்த எச்சரிக்கை!

உலகில் அடுத்து வர இருக்கும் தொற்றுநோய் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த பெருந்தொற்று
அடுத்த பெருந்தொற்றுமுகநூல்

பொருளாதாரம், தனிநபர் மனநிலை என எல்லா வகையிலும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றுதான் கொரோனா பெருந்தொற்று. இதன் தாக்கத்திலிருந்து நாம் விடுபடவே, பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம்.

தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறோம் என்ற போதிலும், கொரோனா தொற்றை அடுத்து தற்போது வேறொரு பெருந்தொற்று உலகை தாக்க தயாராக உள்ளது என இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவிக்கையில், “உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி. ஆக, அத்தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த நடவடிக்கையை எந்தவிதத்திலும் தாமதித்து விடக் கூடாது.

பெருந்தொற்றை கண்டறியும் முறையை உருவாக்குவது, தடுப்பூசிகள், சிகிச்சை முறை ஆகியவற்றை நாம் தயாராக வைத்திருந்தால், கொரோனா தொற்றையேகூட நாம் தடுத்திருக்கலாம். இவற்றை நம்மால் உருவாக்கிவிட முடியும் என்றாலும் சர்வதேச ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.  2021ஜி 7 மாநாட்டில், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில், அடுத்த பெருந்தொற்றை தடுக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று உறுதிபூண்டு கொண்டனர். ஆனால் , தற்போது இதனை அனைவரும் மறந்துவிட்டனர்.

பொதுவாக, ஒரு நாட்டை பொறுத்தவரை ராணுவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ராணுவம் என்பது எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக ஆண்டு முழுக்க போர் உண்டாக போகிறது என்ற அர்த்தம் இல்லை.

இதே போலதான் பெருந்தொற்று காலத்திலும், அது இல்லாத காலத்திலும் என எப்போதும் அதை எதிர்க்கொள்ள ஆயுத்தமாக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தொற்று காலத்தில் மட்டும் தொற்றுக்கான அதிகம் கவனம் செலுத்திவிட்டு, மற்ற காலங்களில் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று நடவடிக்கை எடுக்காமல் இருக்கக்கூடாது.

அடுத்த பெருந்தொற்று
ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை... குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்!

அப்படி அலட்சியமாக விட்டுவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். ஆகவே, பெருந்தொற்று தொடர்பாக, அதை எப்படி கையாள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை கொண்டு வர வேண்டும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த ஒப்பந்தம்,தொற்றுநோய் ஏற்படும் காலங்களில் உலக நாடுகள் அதை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றன என்பதை முன்மொழியும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை போதிய கவனத்தை நாடுகள் செலுத்துவதாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com