வெயில்காலத்திலும் வெந்நீரில் குளிக்கும் பழக்கமுடையவரா? அப்போ பலன்களை தெரிஞ்சுக்கோங்க!

வெயில்காலத்திலும் வெந்நீரில் குளிக்கும் பழக்கமுடையவரா? அப்போ பலன்களை தெரிஞ்சுக்கோங்க!

வெயில்காலத்திலும் வெந்நீரில் குளிக்கும் பழக்கமுடையவரா? அப்போ பலன்களை தெரிஞ்சுக்கோங்க!
Published on

நம் முன்னோர்கள் குளிர் தண்ணீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று கூறி நம்மை பழக்கப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதையே நாம் விரும்புவோம். வெயில்காலத்திலும் வெந்நீரில் குளிப்பது நல்லது என்கிறது ஒரு புதிய ஆய்வு. இது தசைப்பிடிப்பால் அவதிப்படுவோருக்கு ரிலாக்ஸை கொடுக்கும். வெளியே வெயிலில் சுற்றிவிட்டு உடனடியாக ஏசி அறைக்குள் செல்லும்போது திடீரென உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்படுவதால் இருமல் மற்றும் தும்மல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். வெந்நீரில் குளிக்கும்போது இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

இதுதவிர மேலும் சில நன்மைகளும் வெந்நீரில் குளிப்பதால் ஏற்படுகிறது.

தசைபிடிப்பு நீங்கும்: பல்வேறு காரணங்களால் தசைபிடிப்பு ஏற்படுகிறது. தவறான முறையில் அமர்தல் அல்லது விளையாடுவதால் தசைபிடிப்பு ஏற்படுகிறது. இதனால் வலி அதிகமாகும்போது மருத்துவரை அணுகுவது சிறந்தது. முதன்முதலாக ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துபவராக இருந்தால் அவர்கள் வெந்நீரில் குளிப்பது மருந்து இல்லாமல் வலியை நீக்கி, தசைகளை தளர்த்தவும், வளைக்கவும் உதவும்.

மன அழுத்தத்தை போக்கும்: கோடைக் காலங்களில், வெப்பம் அதிகமாக இருப்பதால் பகல், இரவு என்று பாராமல் எப்போதும் ஏசியை பயன்படுத்துகிறோம். ஏசி அறையைவிட்டு வெளியேறும்போது உடனடியாக அதீத வெப்பநிலைக்குள் செல்வதால் அது தொற்று ஏற்பட வழிவகுக்கும். இதனால் உடலில் ஒருவித அழுத்தமும், அசௌகர்யமும் ஏற்படும். எனவே சூடான நீரில் குளிப்பது அழுத்தத்தை குறைத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.

மாதவிடாய் வலியைக் குறைக்கும்: மாதவிடாய் காலங்களில் சூடான தண்ணீரில் குளிப்பது வலியை சற்று குறைக்கும். சூடான தண்ணீர் நரம்புகளில் அழற்சியை குறைக்கும்.

சருமத்தை சுத்திகரிக்கும்: சரும துவாரங்களை திறந்து சருமத்தில் படிந்துள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு குளிர்ந்த நீரை விட வெந்நீரே சிறந்தது.

ஒற்றை தலைவலிக்கு தீர்வு: ஒற்றை தலைவலி எப்போதும் வராவிட்டாலும், எப்போதாவது வருவதே அதீத அசௌகர்யத்தை உருவாக்கும். சூடான தண்ணீரில் குளிப்பது நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலியை குறைத்து உடனடியான தீர்வை கொடுக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com