வெயிலை எதிர்கொள்ள மருத்துவர்களின் அறிவுரை: செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை!!

வெயிலை எதிர்கொள்ள மருத்துவர்களின் அறிவுரை: செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை!!
வெயிலை எதிர்கொள்ள மருத்துவர்களின் அறிவுரை: செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன?

செய்ய வேண்டியவை :

* பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

* பருத்தி ஆடைகளிலும் வெள்ளை மாதிரியான வெளிர் நிற ஆடைகளை அணிதல்.

* முடிந்தவரை வெயில் படாமல் பார்த்துக் கொள்ளுதல்,  

* வெயில் பட வாய்ப்புள்ள முகம், கை, கழுத்து ஆகிய இடங்களில் சன் ஸ்க்ரீன் லோசன் தடவிக் கொள்ளுதல் ,

* ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு வெயில் காலங்களில் தண்ணீர் குடிக்க வேண்டும் ,

* பொட்டாசியம் நிறைந்த பானமாகிய இளநீரை அதிகம் பருக வேண்டும்,  

* பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

*தவிர்க்க இயலாமல் வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் வெளிர் நிற குடைகளை பயன்படுத்துதல்

செய்யக் கூடாதவை :

* ஜீன்ஸ் , லெக்கின்ஸ் உள்ளிட்ட உடலை இறுக்கும் ஆடைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

* கருப்பு நிற உடைகளை முற்றிலும் தவிர்த்தல் ஆகியவை அவசியம்

* பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்,  

இவை தவிர, வெயிலில் நின்று தான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ள உடலுழைப்பு தொழிலாளர்களாகிய சாலைப்பணியாளர்கள் , வயலில் வேலை செய்வோர், போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோர் 5 லிட்டரை விட எவ்வளவு முடியுமோ கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து 2 நாட்கள் மிக அதிகமான வெயிலில் இருக்க நேர்ந்தால் Heat stroke எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது

சுத்தமான தண்ணீரை தவிர்க்காமல் குடித்து வருவதே இந்த வெயிலில் இருந்து எளிமையாக பாதுகாத்துக் கொள்ளும் வழி என்பது மருத்துவர்களின் கருத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com