cancer
புற்றுநோய்எக்ஸ் தளம்

உலகளவில் அதிகரிக்கும் புற்றுநோய்.. ‘கூல் லிப்’ குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு 2050ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு வரை உயரக்கூடும் என அடையாறு புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on

உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு அதிகரித்துவருகிறது. மாறிவரும் வாழ்வியல் முறைகளே இதற்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இளைஞர்களிடையே பரவி வரும் ’கூல் லிப்’ (Cool Lip) பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இதிலும் உள்ளதால், இது நேரடியாக ரத்தத்தில் கலந்து சிகரெட்டை விடத் தீவிரமான புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுகிறது என்கிறார் அவர். குணமாகாத வாய்ப்புண் மற்றும் தொடர் இருமல், இரண்டு வாரங்களுக்கு மேலான செரிமானப் பாதிப்பு, மலம் கழிப்பதில் திடீர் மாற்றங்கள் போன்றவை தென்பட்டால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் எனவும் புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா தெரிவித்துள்ளார்.

cancer
புற்றுநோய்pt web

மேலும், புற்றுநோயைத் தடுக்கத் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மாசு மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையைத் தவிர்ப்பதே புற்றுநோயைத் தடுப்பதற்கான முதல் கேடயம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

cancer
சட்டவிரோதமாக விற்கப்பட்ட தமிழக கோயில் சிலைகள்.. திரும்ப அளிக்க அமெரிக்கா முடிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com