கொசுமருந்துக்கு எதிரான எதிர்ப்புத்தன்மையை வளர்த்துள்ளதா ஏடீஸ் கொசுக்கள்?

கொசுமருந்துக்கு எதிரான எதிர்ப்புத்தன்மையை வளர்த்துள்ளதா ஏடீஸ் கொசுக்கள்?
கொசுமருந்துக்கு எதிரான எதிர்ப்புத்தன்மையை வளர்த்துள்ளதா ஏடீஸ் கொசுக்கள்?

மழைக்காலம் வந்தாலே வரக்கூடிய பெரிய தொல்லை கொசு. டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் மழைக்காலங்களில் பல மடங்கு அதிகரிக்கும். எனவே இந்த நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்க கொசுக்கடியிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏடீஸ் கொசு வீட்டில் தெளிக்கும் டெல்டாமெத்ரின் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொண்டுள்ளதாக கூறியிருக்கிறது வடக்கு வங்க பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு. இதனால் கொசுக்களால் பரவும் நோய்த்தொற்றுக்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது.

பருவநிலை மாற்றம் நோய்த்தொற்றுகள் பரவ மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிக தண்ணீர் தேக்கம் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற அதிக நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகிறது. இதுகுறித்து மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனை தொற்று நோய்ப்பிரிவு நிபுணர் டாக்டர் வசிம் காட் கூறுகையில், ‘’தண்ணீர் தேக்கம் அளவு அதிகரிப்பது என்பது கொசுக்கள் உற்பத்திக்கு அடித்தளமிடுகிறது என்று அர்த்தம்.

இது டெங்கு, மலேரியா மற்ரும் சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுக்களையும் அதிகரிக்கிறது. மாசுகலந்த தண்ணீரை குடிப்பது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

மழைநீர் வெள்ளத்தில் இறங்கி நடப்பது, லெப்டோஸ்பிரோசிஸ் எனும் கடுமையான காய்ச்சல் நோயை உருவாக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற வெள்ளநீரில் இறங்காமல் இருப்பது சாத்தியமில்லை என்றாலும், நிபுணர்கள் பரிந்துரைக்கும் 24-72 மணி நேரத்திற்குள் டாக்ஸிசைக்ளினின் தாக்கத்திற்கு தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது’’ என்கிறார்.

மழைக்காலங்களில்,
1. கொசுவலைகளை பயன்படுத்தவும்
2. கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க முழுக்கை சட்டைகளை அணியவும்
3. கொசுவிரட்டிகளை பயன்படுத்தவும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com