காலாவதியான 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் அழிப்பு - ஆதார் பூனாவாலா அறிவிப்பு

காலாவதியான 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் அழிப்பு - ஆதார் பூனாவாலா அறிவிப்பு
காலாவதியான 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் அழிப்பு - ஆதார் பூனாவாலா அறிவிப்பு

காலாவதியான 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் அழிக்கப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு மருந்துகள் 2 தவணையாகவும், பூஸ்டராகவும் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் காலாவதியாகி விட்டதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் அதிகம் செலுத்தப்பட்டன.

இந்தியாவிலுள்ள 70 சதவீதம் பேர் குறைந்தது 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டுள்ளனர். மக்களிடையே ஆர்வம் குறைந்ததால் கடந்தாண்டு டிசம்பர் மாதமே கோவிஷீல்டு தடுப்பு மருந்து உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் தெரிவித்துள்ளது. அதன்பின் 9 மாத ஆயுட்காலம் காலாவதியாகி விட்டதால் 100 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு மருந்துகள் செப்டம்பரில் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com