79 சதவீதமாக உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு - ஆய்வுகள் சொல்வதென்ன?

உலக அளவில் கடந்த 3 வருடங்களில் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே 79 சதவீதத்தினர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பு
புற்றுநோய் பாதிப்புமுக்நூல்

இந்த சதவீதம் முன்னைய சதவீதத்தைவிட அதிகரித்து காணப்படுகின்றது என்று பிரிட்ஷ் மருத்துவ இதழியலானது (புற்றுநோய்) (British Medical Journal ) வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டில் உலக அளவில் ஒப்பிட்டு பார்த்தால் 50 வயதுக்கு உட்பட்ட 1.82 மில்லியன் பேர் பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 2019 ஆம் ஆண்டில் இந்த பாதிப்பு எண்ணிக்கையானது 3.82 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த காலகட்டத்தில் ஆரம்பகட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் என்பது 28 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கின்றன.

இந்த BMJ ஆய்வானது Global Burden of Disease என்பதிலிருந்து 2019 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியா உள்பட 204 நாடுகளில் 29 வகையான புற்றுநோய் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய விவரங்களானது பெறப்பட்டுள்ளது.

British Medical Journal
British Medical JournalFacebook

இந்த BMJ ஆய்வின் மூலமாக 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு மார்பக புற்றுநோயின் முதல் கட்ட விளைவுகள் அதிகளவில் அதிகரிப்பதாக 2019 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு தெரிவிக்கின்றது. ஆனால் மூச்சுக்குழல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட்ரோஸ் புற்றுநோய் போன்றவை 1990 ஆம் ஆண்டிலிருந்தே அதிகரிக்க தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கின்றன.

1990 மற்றும் 2019 இடைப்பட்ட ஆண்டில் ஆரம்பக்காலகட்ட மூச்சுக்குழல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட்ரோஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.28 மற்றும் 2.23% ஐ என்ற விகிதத்தை கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் இதேபோல கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.88% என்றும்,

ஹெபடைடிஸ் பி என்ற தடுப்பூசியினை கொண்டு கல்லீரல் புற்றுநோயை சார்ந்த பாதிப்புகளை குறைப்பதில் இந்த உலக அளவிலான நோய்திட்டம் சிறந்த பங்காற்றிவருவதாக தெரிவிக்கிறது.

ஆரம்ப கால புற்றுநோயால் பாதிக்கப்படவர்களின் தரவுகள்:

1990:

மொத்தம்: 1.82 மில்லியன்

செரிமான மண்டல புற்றுநோய் - 22%

தோல் புற்றுநோய் - 15%

இனப்பெருக்க மண்டல புற்றுநோய்- 15%

மார்பக புற்றுநோய்- 14%

ரத்தகசிவு அமைப்பு புற்றுநோய்- 11%

2019:

மொத்தம்: 3.26 மில்லியன்

செரிமான மண்டல புற்றுநோய் - 19%

தோல் புற்றுநோய் - 17%

இனப்பெருக்க மண்டல புற்றுநோய்- 15%

மார்பக புற்றுநோய்- 17%

ரத்தகசிவு அமைப்பு புற்றுநோய்- 9%

ஆரம்பக்கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள்:

1990:

மொத்தம்: 0.83% மில்லியன்

செரிமான மண்டல புற்றுநோய் - 36%

சுவாசமண்டல புற்றுநோய்-15%

இனப்பெருக்க மண்டல புற்றுநோய்- 10%

மார்பக புற்றுநோய்- 11%

ரத்தகசிவு அமைப்பு புற்றுநோய்- 13%

2019:

மொத்தம்:1.05 மில்லியன்

செரிமான மண்டல புற்றுநோய் - 32%

சுவாசமண்டல புற்றுநோய்-15%

இனப்பெருக்க மண்டல புற்றுநோய்- 11%

மார்பக புற்றுநோய்- 13%

ரத்தகசிவு அமைப்பு புற்றுநோய்- 12%

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com