\
heart problem
heart problemfile image

மாரடைப்புக்கு வழிவகுக்கும் 5 அபாய காரணிகள்.. தவிர்ப்பது எப்படி?

வெளியில் எந்தவிதப் பெரிய அறிகுறிகளையும் காட்டாமல், இரத்த நாளங்களை மெல்ல மெல்லப் பாதித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும் 5 முக்கிய அபாயக் காரணிகள் குறித்து இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Published on: 

வெளியில் எந்தவிதப் பெரிய அறிகுறிகளையும் காட்டாமல், இரத்த நாளங்களை மெல்ல மெல்லப் பாதித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும் 5 முக்கிய அபாயக் காரணிகள் குறித்து இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு மரணங்கள்
மாரடைப்பு மரணங்கள்AI

இதயத் தமனிகளில் கொழுப்பு படிந்து தடம் அடைபடும்போதோ, அந்தப் படிவத்தின் மீது ரத்த உறைவு ஏற்பட்டு ரத்த ஓட்டம் முழுமையாகத் தடைபடும்போதோ மாரடைப்பு ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மன அழுத்தம் ஆகிய ஐந்தையும் மாரடைப்புக்கான முக்கியக் காரணிகளாக மருத்துவர்கள் சுட்டுகின்றனர். 

புகைபிடிக்கும் பழக்கம், ரத்த நாளங்களின் உள்பகுதியைப் பாதித்து, ரத்த உறைவை ஏற்படுத்துவதுடன் ஆக்சிஜன்அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோய், ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, ரத்த நாளங்கள் வேகமாகச் சேதமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களின் சுவர்களில் தொடர் அழுத்தத்தைக் கொடுத்து அவற்றைப் பலவீனப்படுத்துகிறது. கெட்ட கொழுப்பு தமனிகளில் படிந்து ரத்த ஓட்டத்தைச் சுருக்குகிறது. இந்த கொழுப்புப் படிவு வெடிக்கும்போது ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு உருவாகிறது. மன அழுத்தம், ரத்த அழுத்தத்தை உயர்த்தி, தூக்கத்தைக் கெடுத்து, தவறான பழக்கவழக்கங்களுக்கும் வழிவகுக்கிறது. இந்தக் காரணிகள் ஒரே நேரத்தில் ஒருவருக்கு அமையும்போது மாரடைப்பு அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான பெரியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தப் பரிசோதனை, கொழுப்பு அளவீட்டுப் பரிசோதனை மற்றும் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். தினமும் 7 முதல் 9 மணி நேரத் தூக்கம், சீரான உடல் எடை மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை, ரத்த அழுத்தம் அல்லது கொழுப்பு அளவு குறைந்தாலும்கூட, ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. குடும்பத்தில் இதய நோய் பின்னணி உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.