46 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல என கண்டுபிடிப்பு - CDSCO அறிவிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற 46 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல, தரமற்றவை என்று CDSCO அறிவித்துள்ளது.
CDSCO
CDSCO முகநூல்

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற 46 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல, தரமற்றவை என்று மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு தனது இணையதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்வது வழக்கம். இதன் மூலம் போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மருந்து நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 932 மருந்தின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டனர். அதில், 886 மருந்துகள் உபயோகப்படுத்துவதற்கு உகந்தவையாகவும், 46 மருந்துகள் தரமற்ற மருந்துகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தரமற்றவையாக கூறப்படும் இந்த 46 மருந்துகள் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், தரமற்ற மருந்துகள் குறித்த விரிவா‌ன தகவல்களை cdsco.gov.in இணையத்தின் மூலமாக கோப்பாக காணலாம்.

CDSCO
அமெரிக்காவில் மான்களுக்கு வேகமாக பரவி வரு ஜாம்பி தொற்று - மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதா?

Amoxycillin andPotassium Clavulanate Tablets IP 375 mg

Vitamin A Oral Solution 100 ml.Trypsin

Bromelain & Rutoside Trihydrate Tablets உள்ளிட்ட 46 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாச்சல பிரதேசம், உத்தரக்கண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என தெரிகிறது. மேலும் இதில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு

இது CDSCO இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பொது சுகாதார சேவைகளின் இயக்குநரகத்தின் கீழ் உள்ளது. மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இதுவரையில் எத்தனையோ தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச்சத்து, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள், காய்ச்சல், கால்சியம், இரும்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், மார்பகப் புற்றுநோய், கிருமித் தொற்றுக்கு பயன்படும் 36 மருந்துகள் என்று நிறைய மாத்திரைகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டு உட்கொள்ள ஏதுவானவை அல்ல என்று தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com