உ.பி|25 நாட்களில் தொடர் மாரடைப்பு மரணங்கள்! உயிரிழந்த 5 பேரில் இருவர் குழந்தைகள்! வெளியான அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 25 நாட்களில் மொத்தம் 5 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அதில் இருவர் குழந்தைகள் என்னும் அதிர்ச்சிகர செய்தி வெளியாகி அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரானா கிராமத்தைச் சேர்ந்தவர் மம்தா சவுத்ரி. இவர் காவல்துறையில் கன்ஸ்டபிள் பணிக்காக உடல் தகுதித் தேர்வுக்குத் தன்னை தயாராக்கி வந்தார். இதற்காக அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில்தான், கடந்த 23 ஆம் தேதி காலை சாலையில் ஓடும்போது திடீரென சுரண்டு விழுந்துள்ளார் மம்தா சவுத்ரி. இதனையடுத்து, அருகில் இருந்த ஜேஎன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பால் உயிரிழந்த சிறுவர்கள்!
சிரௌலி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மோஹித் சவுத்ரி. இவர் 6ம் வகுப்பு படித்து வந்தார். 14 வயது சிறுவனான இவர், விளையாட்டு தின போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே இறந்துள்ளார்.
இதேப்போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை, லோதி நகரில் வசிக்கும் எட்டு வயது திக்ஷா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மாரடைப்பால் மரணம் அடைந்த மருத்துவர்!
நவம்பர் 5 ஆம் தேதி, குழந்தை மருத்துவர் டாக்டர் லவ்னிஷ் அகர்வால் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியை மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பினார். இந்தநிலையில்தான், வேலைக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்
29 வயதான சையத் பர்கத் ஹைதர் நவம்பர் 20 அன்று தூக்கத்தில் இறந்துள்ளார். இதுக்குறித்து அவரின் குடும்பத்தின் தெரிவிக்கையில், ”அவர் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது எப்போதும் குறட்டை விடுவது வழக்கம்..ஆனால், அன்றைய தினம் குறட்டை விடுவதை நான் கேட்கவில்லை. அப்போது, அவரை நான் சோதித்து பார்த்தபோது, அவருக்கு இறந்துவிட்டார் என்று தெரியவந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து இருதயநோய் நிபுணர் அசார் கமல் தெரிவிக்கையில் “ கோவிட்க்குப் பிறகு கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், இளைஞர்களிடையே மாரடைப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன. அத்தகைய நோயாளிகளுக்கு மன அழுத்தம் ஒரு பெரிய காரணியாக இருந்தது. “ என்று தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளில் 22% அதிகரிப்பு!
இது குறித்து அலிகார் பல்கலைக்கழக்கத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கையில், “கடந்த 20 ஆண்டுகளில் மாராடைப்பால ஏற்படும் இறப்பு விகிதம் என்பது 22% அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான ஒருவர் ஒரு மணி நேரத்திற்குள் இறந்துவிட்டால், அதை திடீர் மாரடைப்பு என்று சொல்வார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால் சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயநோய் இருக்கிறது.பரிசோதனை செய்யாவிட்டால்...குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஏற்பட்டால், அது உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியதில், தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கோவிட் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகையவர்கள் முன்க்கூட்டியே பரிசோதனை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்..