ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது?

ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது?
ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது?

தமிழகத்தில் மழைக் காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல்களைப் போன்றது தான் ஜிகா வைரஸ் பாதிப்பும். டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய ஏடிஸ் வகையை சேர்ந்த கொசுக்கள் தான் ஜிகா வைரஸையும் பரப்புகிறது. இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தாலும், தமிழகத்தில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள்:
சாதாரண காய்ச்சலுக்கு உள்ளதை போன்றே, தலைவலி‌, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல் ஏற்பட்டவுடனே‌ மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பு முறைகள்:
தமிழகத்தைப் பொருத்தவரை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் ஜிகா வைரஸ் தாக்குதல் குறைவு என கூறப்படுகிறது. ஜிகா மட்டுமின்றி எந்த வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகக்கூடாது என நினைப்பவர்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், காய்ச்சி வடிக்கட்டிய குடிநீரை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், குழந்தையும் பாதிக்கப்படும் என்பதால் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த நோய் தொடர்பான அறிகுறியோ, சந்தேகமோ எழுந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com