நம்மிடம் திறமை இருக்கிறது, ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லையே என்கிற கவலை தான் பலரது குமுறலாக இருந்து வருகிறது. இந்த குமுறலை எப்படி சரி செய்வது?. என்ன செய்தால் வெற்றி? என்பதை இன்று பார்ப்போம்.
எந்த வேலையை கொடுத்தாலும் நேரம் பார்க்காமல் செய்து முடிப்பேன். என்ன செய்வது?
நேர்முகத் தேர்வின் போது சிறு வேலையை என்னிடம் கொடுங்கள், நான் செய்து காட்டுகிறேன் என்று சொல்லலாம்.
நான் படித்ததற்கு ஏற்றார் போல் சரியான வேலை கிடைக்கவில்லை?
எந்த வேலையாக இருந்தாலும் நான் திறம்பட செய்து முடிப்பேன் என்று சவால் விடும் அளவிற்கு நம் திறமையை வளர்த்திக்கொள்ள வேண்டும். படிப்பு என்பது அனுபவங்களையும், அறிவையும் தருவதற்கு மட்டுமே. அனுபவங்களின் மூலமே நம் வாழ்க்கையை படிக்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் படித்துமுடித்து ரொம்ப வருடம் ஆகிறது, சரியான வேலை கிடைக்கவில்லை?
சரியான வேலை என்பது நாம் நினைப்பதில் மட்டுமே இருக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும், திறம்பட பயணித்தால் வெற்றியை சந்திக்கலாம்.
நான் எவ்வளவு வேலை செய்தாலும், சம்பளத்தை நிறுவனம் அதிகரிப்பதில்லை?.
நாம் என்ன வேலை செய்கிறோம் என்று நமக்கு நாமே முதலில் SELF ASSESMENT செய்து கொள்ள வேண்டும். சரியாக வேலை செய்கிறோம் என்று முடிவு செய்தால். இதுவரை செய்த பணிகளையும், அதன் வெற்றிகளையும் ரிப்போர்ட் ஆக நிறுவனத்திடம் சமர்ப்பித்து சம்பள உயர்வை கேட்கலாம்.
என்னிடம் அனுபவம் இருக்கிறது, புதிய நிறுவனம் தொடங்கலாமா?
அனுபவம் மட்டும் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதில்லை. அனுபவத்துடன் பணியாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
இதுபோன்ற பல கேள்விகள் உங்களிடம் இருக்கலாம். திறமையை எப்படி செயல்படுத்துவது என்கிற கேள்விகள் இருந்தால் எழுதி அனுப்பலாம் puthiyathalaimurai.karthik@gmail.com
அடுத்த வாரம் எந்த தொழில் செய்தால் வெற்றி என்பதை “சொல்லிஅடி”ப்போம்.
(தொடரும்)