”சுர்ஜித் போன்று பல இளைஞர்கள்.. இதற்காகத்தான் பெரியார் அப்போதே..” - நிவேதிதா லூயிஸ் நேர்காணல்

சாதிய ஆணவப் படுகொலைகள் குறித்து எழுத்தாளரும், சமூம செயற்பாட்டாளருமான நிவேதிதா லூயிஸ் நேர்காணல்..
Q

இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் எனும் கேள்விகளை நாம் தினமும் கடந்து வருகிறோம். ஆனால், இப்போதும் சாதிய ஆணவக் கொலைகள் நடக்கின்றன.. அதற்கு முக்கியக் காரணமாக எது இருக்கிறது?

A

இங்கிருக்கும் சாதியக் கட்டமைப்பு உனக்குக் கீழ் ஒருவன் இருக்கிறான் என்றே சொல்லிக்கொடுத்திருக்கிறது. அப்படியானால், எனக்குக் கீழ் இருப்பவன் எனக்கு சமமாக ஏதோ ஒரு இடத்தில் வரும்போது அது பிரச்னையாகிறது. குறிப்பாக. தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும்தான் ‘பொதுவெளிக்கு வந்த’ சாதிய ரீதியிலான குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கொஞ்சம் மேலே வரும்போது, இடைநிலை சாதிகளிடம் இருக்கக்கூடிய ஆதிக்க சாதி மனப்பான்மை அவர்களை குற்றம் செய்வதற்குத் தூண்டுகிறது. இந்த எண்ணம் இப்போது அதிகமாக கிராமப்புற இளைஞர்களிடம் விரவிக்கிடப்பதைப் பார்க்கிறோம். இந்த உலகமயமாதல் சூழலிலும் சாதியத்தின் வேர்கள் கிராமங்களை விட்டு வெளியேவரவில்லை. கிராமங்களை ஒழிக்க வேண்டுமென பெரியார் பேசியது இதனையொட்டித்தான்.

சாதி எங்கேயும் போய்விடவில்லை.. திருமணம் என்று வரும்போதுதான் இந்த சாதி எட்டிப்பார்க்கும். அதுவரைக்கும் நாங்கள் சாதி பார்ப்பதில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது எங்கள் சாதிக்குள்தான் இருக்க வேண்டுமென சொல்வார்கள்.

நிவேதிதா லூயிஸ் பகிர்ந்த தகவல்களை காணொலியில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com