உலகின் ஃபேமஸான எமோஜி எது தெரியுமா?

உலகின் ஃபேமஸான எமோஜி எது தெரியுமா?
உலகின் ஃபேமஸான எமோஜி எது தெரியுமா?

நெட்டிசன்கள் தங்கள் உணர்வுகளை எமோஜிக்கள் எனப்படும் பாவனைகள் மூலமாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு விதமான எமோஜிக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், அவற்றில் பிரபலமான எமோஜி எது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் வீ யீ (Wei Ai) மேற்கொண்ட இந்த ஆய்வு உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி (Face with Tears of Joy), கடந்த 2015ம் ஆண்டில் உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது. மொத்த எமோஜி பயன்பாட்டில் இந்த எமோஜியை 15.4 சதவீதம் பேர் பயன்படுத்தி இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், முகபாவனை, கை மற்றும் இதய வடிவிலான எமோஜிக்களே அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட முதல் 20 எமோஜிக்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com