இன்று சிரிப்பு தினம்: ஏலேய், டோன்ட் வொர்ரி பி ஹேப்பி!

இன்று சிரிப்பு தினம்: ஏலேய், டோன்ட் வொர்ரி பி ஹேப்பி!
இன்று சிரிப்பு தினம்: ஏலேய், டோன்ட் வொர்ரி பி ஹேப்பி!

இன்று, சிரிப்பு நாள். மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமைதான் அந்த சிறப்பு நாள். 

மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா, முதன் முறையாக 1988 இல் ஆரம்பித்து வைத்தார், இந்த தினத்தை. இவர் உலக நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாட்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Movement) தொடங்கியவர்.

இன்றைய இயந்திர உலகில் சிரிப்புதான் தேவை. ஏனென்றால் அது சிறந்த மருந்து என்கிறார்கள் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும். சிரிக்கும் போது, முழு உடலுக்கும் அது நன்மை தருகிறது. அதன் மூலம் உள்ளுறுப்புகளை வலிமையாக்க முடியும் என ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும், அவற்றின் மூலக் கூறுகளின் எண்ணிக்கையும் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பணம் பண்ணும் நோக்கில், அவசரம் அவரசம் என சிரிப்பை மறந்து சீறி பாய்கிறோம் இப்போது. சிரிப்பதற்கு நேரமில்லாமல் பறப்பதால் நோய்கள் தேடி வருகின்றன நம்மை. மன அழுத்தம் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. எங்கும் டென்ஷன். அலுவலக டென்ஷனை வீட்டிலும் வீட்டின் டென்ஷனை அலுவலகத்திலும் காண்பிக்கத் தொடங்குகிறோம். அந்த டென்ஷனை குறைக்கும் சூப்பர் டானிக், சிரிப்பு மட்டுமே! அதனால் சிரிப்போம். மற்றவர்களையும் சிரிக்க வைப்போம். 

’ஏலேய், டோன்ட் வொர்ரி பி ஹேப்பி !’ 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com