`மத்திய பட்ஜெட் 2023-ல் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு இதலாம்தான்!’

`மத்திய பட்ஜெட் 2023-ல் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு இதலாம்தான்!’
`மத்திய பட்ஜெட் 2023-ல் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு இதலாம்தான்!’

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் bhel நிறுவனத்தை சார்ந்து இயங்கும் சிறு மற்றும் குறுந்தொழில் கோரிக்கைகள் குறித்து சிறுதொழில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் நம்மிடையே சில முக்கிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் மிகவும் முக்கியமானது bhel நிறுவனம். இந்நிறுவனத்திற்குள் கிட்டத்தட்ட 500 சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இயங்கி வந்த நிலையில், தற்பொழுது வெறும் 50 நிறுவனங்கள் மட்டுமே மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறது. நாளை நடக்க இருக்கிற பட்ஜெட் தாக்கலில் நலிவுற்ற நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான அறிவுப்புகள் வந்தால் மகிழ்சியாக இருக்கும்?

“MSME அமைப்பு, இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லலாம். இந்நிறுவனத்தின் மூலம் அரசாங்கம் நல்ல வருமானத்தை ஈட்டி வரும் நிலையில், இதற்கு சில சலுகைகளை மத்திய, மாநில அரசிடமிருந்து எதிர்பார்கிறோம். அதில் முதலாவதாக, public sector procurement policy-ஐ மாற்றவேண்டும். இது நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. இதில் மாற்றம் வந்தால் தான், அரசாங்கத்திற்கு வரிகள் உயரும். மேலும் special fund வழங்க கேட்டுக்கொண்டுள்ளோம். இதன் மூலம் நலிவடைந்த தொழில்களை விரைவாக முன்னேற்ற முடியும்.

procuremer policy-ஐ (anual rate contract system) அரசாங்கம் பின்வாங்கி கொண்டது. ஆனால் அது நடைமுறையில் இருந்தால், annual contract with price variation இருக்கும். அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆகவே இம்முறையை திரும்ப நடைமுறை படுத்தும்படி மனு கொடுத்துள்ளோம்.

பாதுகாப்பு நிறுவனங்களுக்கான ஆடர்களை BHEL-ல் செய்ய முடியுமா? முக்கியமாக ராணுவ தளவாடங்களுக்கு சொந்தமான உபகரணங்கள் உதிரி பாகங்களை இங்கு உற்பத்தி செய்ய இயலுமா?

நிச்சயமாக முடியும். தயாரிப்பதற்கு தேவையான அத்தனை வசதி வாய்ப்புகளும் இங்கு இருக்கிறது. அதற்கு சரியான மேற்பார்வை செய்யக்கூடிய IAS அதிகாரிகள், மாதம் ஒரு கூட்டம் என்று செயல்பட்டால் அதிகமான ஆடர்களைப்பெற்று, உற்பத்திசெய்து தர முடியும். fabrication and welding ல் திருச்சி முதல் இடத்தில் இருப்பதால், எந்த வகையான தளவாடங்களையும் இங்கு உற்பத்தி செய்யமுடியும். இதற்கு போதுமான நிதியை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும். வங்கியும் முன் வரவேண்டும். அதன் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெரும்” 

ராஜ்குமாரின் பேட்டியை வீடியோ வடிவில், கீழே காணுங்கள்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com