தோனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா சாம்பியன்ஸ் கோப்பை?

தோனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா சாம்பியன்ஸ் கோப்பை?

தோனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா சாம்பியன்ஸ் கோப்பை?
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்வை சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நிர்ணயிக்க வாய்ப்பிருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. கேப்டன் கூல் என்று அறியப்பட்ட தோனி, அந்த பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் பங்கேற்கும் முதல் ஐசிசி தொடர் இது. நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டிக்கு முன்பாக எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் மிகவும் இயல்பாக பயிற்சி மேற்கொண்ட தோனியைப் பார்க்க முடிந்தது. தோனியின் கிரிக்கெட் கேரியர் 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடர் வரை நீடிக்கும் என்பதற்கான அறிகுறியாக இதைப் பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். பயிற்சி முடிந்த பின்னர், இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்துடன் தோனி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக பிரசாத் கொடுத்த அழுத்தமே முக்கியமான காரணம் என்று கூறப்படும் தகவல் இந்த தருணத்தில் கவனிக்கத்தக்கது. முன்னாள் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான பிராசத்துடன் பேட்டிங் மற்றும் கீப்பிங் குறித்தும் தோனி ஆலோசித்திருக்க வாய்ப்புண்டு என்ற கருத்தினையும் புறக்கணிக்க முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com