பஞ்சாப் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிருப்தியில் சரண்ஜித் சிங், சித்து - காரணம் என்ன?

பஞ்சாப் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிருப்தியில் சரண்ஜித் சிங், சித்து - காரணம் என்ன?
பஞ்சாப் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிருப்தியில் சரண்ஜித் சிங், சித்து - காரணம் என்ன?

பஞ்சாப் மாநிலத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சரண்ஜித் சிங்க் மற்றும் நவ்ரோஜ் சிங் சித்துவின் ஆதரவாளர்களுக்கு சீட்டு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப் காங்கிரஸில் அதிருப்தி நிலவி வருகிறது.

பஞ்சாப் தேர்தலையொட்டி அண்மையில் காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. ஆனால், இந்த வேட்பாளர் பட்டியலை அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ரோஜ் சிங்குக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முதல்வர் சரண்ஜித் சிங் தனது உறவினர்கள் இருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், கட்சி மேலிடம் அதை மறுத்துள்ளது. வெளியான 86 வேட்பாளர்கள் பட்டியலில், அவரது சகோதரர் மனோகர் சிங் மற்றும் உறவினர் மொஹிந்தர் கேபியோ இடம் பெறாதது சரண்ஜித்துக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சரண்ஜித் சிங்கின் சகோதரர் மனோகர் சிங்கை பொறுத்தவரை, ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள பஸ்ஸி பதானா சட்டமன்றத் தொகுதியில் சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது அரசு பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், சீட்டு கிடைக்காத விரக்தியில், தற்போது சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதேபோல, சரண்ஜித் சிங்கின் உறவினரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கேபீ (Kaypee) பாஜகவில் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சீட்டு கிடைக்கும் என்ற சரண்சிங் சிங்கின் உறுதியை ஏற்று பாஜகவிலிருந்து வந்த ஹர்கோபிந்த்பூர் எம்.எல்.ஏ பல்விந்தர் சிங் லட்டியும் அதிருப்தியில் உள்ளார்.

மேலும், சரண்ஜித் சிங் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சம்கவுர் சாஹிப் தொகுதியுடன், கூடுதலாக சிரோமணி அகாலி தளத்தின் பவன்குமாருக்கு எதிராக களமிறங்க விரும்பினார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதன் மூலம் தனது மீண்டும் முதலமைச்சராகும் கோரிக்கையை வலுப்படுத்த முடியும் என அவர் நம்பினார். ஆனால், அவருக்கு சம்கவுர் சாஹிப் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் தலைமை ஒதுக்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் 63 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு மறுப்பதன் மூலம் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் தலைமை அஞ்சுகிறது. காங்கிரஸின் அச்சத்தின்படியே தான் வேட்பாளர் பட்டியல் வெளியான தினத்தன்று நடந்தது. சீட்டு மறுக்கப்பட்டதால் மோகா எம்எல்ஏ ஹர்ஜோத் கன்வால் மற்றும் மாலவுட் எம்எல்ஏ அஜய்ப் சிங் பாட்டி ஆகியோர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

அதேபோல வேட்பாளர் பட்டியல் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ரோஜ்சிங் சித்துவுக்கும் ஏமாற்றம் தான். போலாத் மற்றும் ஃபதேகர் இடங்களில் போட்டியிட தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ரஞ்சித் சிங் சஜ்ஜல்வாடியின் மகனான சித்து விசுவாசி சதீந்தர் சிங் சஜ்ஜல்வாடிக்கும் சீட்டு கிடைக்க போராடினார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.

கட்சியின் இந்த முடிவால் அதிருப்தியில் சீட்டு கிடைக்காத கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடலாம் அல்லது பாஜகவில் இணையலாம். 12 சிட்டிங் எம்எல்ஏக்கள் இன்னும் சீட்டுக்காக காத்திருப்பதால் மற்ற தொகுதிகளுக்கும் இந்த அதிருப்தி பரவ வாய்ப்புள்ளது. இரண்டாவது பட்டியல் இந்த வார இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com