\
Who is Nihang Sikhs? Why Joined on CJP Protests
நிஹாங் சீக்கியர்goolge gemeni

கத்தி, ஈட்டி, கஞ்சா.. ‘நிஹாங் சீக்கியர்கள்’ என்பவர்கள் யார்? சிஜேபி போராட்டத்தில் இணைந்தது ஏன்?

சீக்கியர்களின் கல்சா படையின் ஒரு பகுதியாக நிஹாங் சீக்கியர்கள் இருக்கிறார்கள். கல்சா படையின் உண்மையான பிரிவு என்றும், சீக்கியர்களின் குருவான குரு கோபிந்த் சிங்கின் உண்மையான பிரதிநிதிகள் என இவர்கள் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கிறார்கள்.
Published on

நீல நிற ஆடை, நீண்ட தாடி, தலைப்பாகை, கையில் எஃகு காப்பு, இடுப்பில் வாள், ஈட்டி என்று கம்பீரமாக வலம் வருகிறார்கள் நிஹாங் சீக்கியர்கள். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ஒழுக்கமற்ற முறையில் செயல்படும் இளைஞர்களைத் வெளுத்து வாங்கினார்கள், கூட்டத்தில் அமைதியையும், ஒழுக்கத்தையும் பராமரித்தார்கள். இவர்களைக் கண்டவுடன் டெல்லி போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் சற்று ஒதுங்கியே இருந்தார்கள். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களும் இவர்களைப் பார்த்தபின் போராட்டத்தின் தன்மையை குலைக்கும் செயல்களான கல்வீசுவது, தண்ணீர் பாட்டில் வீசுவது, பெண்களைச் சீண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடவே தயங்கினார்கள். ஆமாம், யார் இவர்கள்? எதற்காக சிஜேபி போராட்டத்தில் இவர்கள் பங்கேற்றனர், இவர்களின் வரலாறு என்ன, ஏன் இவர்களைக் கண்டால் போலீஸாரே அஞ்சுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் விடை காணலாம்.

முகலாயர்கள் காலத்தில் வீரத்துக்கும், அச்சமின்மைக்கும், களத்தில் போர் தந்திரங்களுக்கும் பெயர் பெற்றவர்கள்.

நிஹாங் சீக்கியர்
நிஹாங் சீக்கியர்google gemeni

யார் இவர்கள்?

இவர்கள், நிஹாங் சீக்கியர்கள். நிஹாங் என்பது அகாலி என்று பஞ்சாபியில் பொருள். அதாவது, ‘கடவுளின் ராணுவம்’,‘அச்சமில்லாதவர்கள்’. இவர்கள் சீக்கியர்களில் ஒரு பிரிவினர். முகலாயர்கள் காலத்தில் வீரத்துக்கும், அச்சமின்மைக்கும், களத்தில் போர் தந்திரங்களுக்கும் பெயர் பெற்றவர்கள்.

சீக்கிய அரசாட்சியில் கொரில்லா போர் முறையைச் சிறப்பாகக் கையாளக்கூடியவர்கள். சீக்கியர்களின் கல்சா படையின் ஒரு பகுதியாக நிஹாங் சீக்கியர்கள் இருக்கிறார்கள். கல்சா படையின் உண்மையான பிரிவு என்றும், சீக்கியர்களின் குருவான குரு கோபிந்த் சிங்கின் உண்மையான பிரதிநிதிகள் என இவர்கள் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்கிறார்கள்.

Who is Nihang Sikhs? Why Joined on CJP Protests
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?

நிஹாங் சீக்கியர்களின் வரலாறு என்ன?

நிஹாங் சீக்கியர்களின் தோற்றம் குறித்த வரலாறு தெளிவாக இல்லை. ஆனால், முகலாயப் பேரரசு வீழ்ந்ததற்குப் பின்புதான் இவர்கள் குறித்த வரலாறு தெளிவாக இருக்கிறது. இவர்களின் வரலாறு குறித்து 3 விதமாக புனைவுகள் தெரிவிக்கின்றன,

அதில் ஒன்று, சீக்கிய மதகுரு கோவிந்த் சிங்கின் மகன் ஃபதே சிங் அணிந்திருந்த நீல நிற ஆடை மற்றும் தலைப்பாகை ஆகியவற்றிலிருந்து நிஹாங் பிரிவு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவதாக, 1704 அல்லது 1705-ஆம் ஆண்டில் சம்கௌரி நகரிலிருந்து குருகோவிந்த் தப்பிச் சென்றபோது நீலநிற ஆடை அணிந்திருந்ததால் அதில் ஒருபகுதியை, அவரின் சீடரான மான் சிங் தனது தலைப்பாகையில் இணைத்ததால், அப்போதிருந்து நிஹாங் பிரிவினர் உருவாகியதாகக் கூறப்படுகிறது.

மூன்றாவதாக ஷஹீதான் மிஸ் இயக்கத்தின் தலைவரான அகாலி நைனா சிங்கின் ஆடையைப் பின்பற்றி நிஹாங் சிங் தோன்றியதாக கூறப்படுகிறது.

சீக்கிய மதகுரு கோவிந்த் சிங்கின் மகன் ஃபதே சிங் அணிந்திருந்த நீல நிற ஆடை மற்றும் தலைப்பாகை ஆகியவற்றிலிருந்து நிஹாங் பிரிவு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

நிஹாங் சீக்கியர்
நிஹாங் சீக்கியர்chat gpt

ஆனால், வரலாற்று அறிஞர்கள் கூற்றுப்படி, “1699-ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங் கல்சா என்ற அமைப்பை உருவாக்கியபோதே ‘நிஹாங்’ பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த நிஹாங் என்ற வார்த்தை, சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாஹிப்பில் இடம்பெற்றுள்ளது. போர் பயிற்சி எடுத்திருப்பதால், ஆயுதங்களைச் சிறப்பாகக் கையாண்டு போர்புரிவதில் வல்லவர்கள், உயிரைத் துச்சமாக மதித்து, கல்சா விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவர்கள். சீக்கியர்களின் குருதுவாராவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியையும், நீதியைக் காக்கவும், அநீதியை அழிக்கவும் முக்கியத்துவம் அளிப்பார்கள். இவர்கள் தனிமனித ஒழுக்கத்தைக் கடுமையாகக் கடைபிடிப்பதால், தனிமனிதர்கள் யாருக்கும் அடிபணியமாட்டார்கள்.

Who is Nihang Sikhs? Why Joined on CJP Protests
ஆயுதங்களுடன் குருத்வாராவைக் கைப்பற்றிய நிஹாங்குகள்.. உத்தரகாண்ட்டில் நடந்தது என்ன?

சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் மரணத்துக்குப் பின், முகலாய ஆட்சியிலும், ஆப்கானியப் படையெடுப்பிலும் பல்வேறு துன்புறுத்தல்களையும், அடக்குமுறைகளையும் சீக்கியர்கள் எதிர்கொண்டனர். இதை எதிர்கொள்ளவும், போரிடவும், எந்தச் சூழலிலும் தயாராக இருக்க ஒரு பிரிவு தேவைப்பட்டது. அதற்காகத்தான் ஆயுதங்கள் ஏந்த படையாக நிஹாங் சீக்கியர்கள் உருவாக்கினர், குருதுவாராக்களை பாதுகாத்தல், சீக்கியர்களை பாதுக்காகவும் இவர்கள் உருவாக்கப்பட்டனர். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிஹாங் சீக்கியர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அதாவது, 1892 கணக்கெடுப்பின்படி, 1392 நிஹாங் சீக்கியர்கள் மட்டுமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1901இல் 401 நிஹாங் சீக்கியர்களாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுதந்திரத்துக்குப்பின்புதான் நிஹாங் சீக்கியர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி, இதில் பல சீக்கியர்கள் சேர்ந்தனர்.

1901இல் 401 நிஹாங் சீக்கியர்களாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுதந்திரத்துக்குப்பின்புதான் நிஹாங் சீக்கியர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி, இதில் பல சீக்கியர்கள் சேர்ந்தனர்.

சீக்கியர் அடக்குமுறை
சீக்கியர் அடக்குமுறைchat gpt

காலிஸ்தான் படையும்-நிஹாங் சீக்கியர்களும் ஒன்றா?

இல்லை. காலிஸ்தான் தீவிரவாதிகளும், நிஹாங் சீக்கியர்களும் வெவ்வேறானவர்கள். இருவரும் சீக்கியர்கள்தான் என்றாலும், தனித்தேசம் கேட்டு காலிஸ்தான் தீவிரவாதிகள் போராடினார்கள். ஆனால், நிஹாங் சீக்கியர்கள் குருதுவாராக்களைப் பாதுகாப்பது, சீக்கியர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினர். அது மட்டுமல்லாமல் சீக்கியர்களுக்கும், காலிஸ்தான் படையினருக்கும் இடையே பலமுறை கொள்கைரீதியாக மோதல் வந்துள்ளது. 1978ஆம்ஆண்டு காலிஸ்தான் படையை அழிக்க பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப்பின் நிஹாங் சீக்கியர்கள், காலிஸ்தான் படையை வெறுத்தனர். இருப்பினும், அந்தச் சம்பவம் நிஹாங் சீக்கியர்களுக்கு பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.

1978ஆம்ஆண்டு காலிஸ்தான் படையை அழிக்க பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப்பின் நிஹாங் சீக்கியர்கள், காலிஸ்தான் படையை வெறுத்தனர். இருப்பினும், அந்தச் சம்பவம் நிஹாங் சீக்கியர்களுக்கு பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.

காலிஸ்தான் அமைப்பினர்
காலிஸ்தான் அமைப்பினர்google gemeni

நிஹாங் சீக்கியர்களின் அடையாளம் என்ன?

சீக்கியர்களுக்கே உரிய 5 கடமைகளை தீவிரமாக நிஹாங் சீக்கியர்கள் கடைபிடிப்பார்கள். இதை 5k என்று அழைப்பார்கள். கேஷ் (தலைமுடி), கங்கா (மரச்சீப்பு), காரா (இரும்பு காப்பு), கச்சேரா (உள்ளாடை), கிர்பான் (சிறிய வாள்). இவற்றை நிஹாங் சீக்கியர்கள் தீவிரமாகக் கடைபிடிப்பார்கள். இதுதவிர, நிஹாங் சீக்கியர்கள் என்பதை வெளிப்படுத்த எப்போதுமே நீல நிற ஆடை, நீலநிறத்தில் பெரிய அளவிலான தலைப்பாகை, அல்லது வெள்ளையில் பெரிய தலைப்பாகை, கையில் ஈட்டியை வைத்திருப்பார்கள். சீக்கிய மதத்தைக் காக்கவும், குருதுராவாக்களைப் பாதுகாக்கவும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நிஹாங் சீக்கியர்கள் அதிகாலை 1 மணிக்கு எழுந்து குருதுவாராவில் பூஜைகளைச் செய்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள், மாலையிலும் குருதுவாராவில் பூஜை செய்து பொழுதை முடிப்பார்கள்.

Who is Nihang Sikhs? Why Joined on CJP Protests
அமிதாப் கால்களைத் தொட்டு வணங்கிய பஞ்சாப் பாடகர்.. மிரட்டல் விடுத்த காலிஸ்தான் அமைப்பினர்!

நிஹாங் சீக்கியர்களில் குழுக்கள் இருக்கிறார்களா?

ஆம், நிஹாங் சீக்கியர்களில் தற்போது 12 குழுக்கள் உள்ளன. இதில் மூத்த குழுவாக, ‘புத்தா தள்’, ‘தருணா தள்’ என்ற பிரிவு மட்டுமே பெயர்பெற்றது. இதில் புத்தா தள் என்பது மூத்தவர்களைக் கொண்ட நிஹாங் பிரிவு, தருணா தள் என்பது இளைஞர்களைக் கொண்ட பிரிவாகும். நிஹாங் பிரிவில் இப்போது பெண்களும் சேரத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கென தனியாக எந்த வாழிடமும் இல்லை என்பதால், பெரும்பாலும் குருதுவாராக்களில் கூடாரம் அமைத்துத் தங்கியிருப்பாரர்கள் சீக்கிய விழாக்கள் நடக்கும்போது இடம்விட்டு இடம்பெயர்ந்து வாழ்வார்கள்.

பிற சீக்கியர்களில் இவர்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

நிஹாங் பிரிவினர் மீது மிகுந்த மரியாதையை பிற சீக்கியர்கள் வைத்துள்ளனர். இதற்குக் காரணம், சீக்கிய மதத்துக்காக நிஹாங் பிரிவினர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வதாலும், துணிச்சல், யாருக்கும் அஞ்சாத போக்கினாலும் மரியாதை வைத்துள்ளனர். இருப்பினும், ரயில், பேருந்து போன்றவற்றில் அடாவடித்தனமாகச் செயல்படுவதாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாலும், சீக்கியர்கள் இவர்களுடன் ஒன்றாகக் கலப்பதில்லை. சீக்கியத்தின் மரபுவழி, பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றுவதால், நிஹாங் பிரிவினரை சீக்கியர்கள் ஒதுக்கியே வைத்துள்ளனர்.

சீக்கியத்தின் மரபுவழி, பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றுவதால், நிஹாங் பிரிவினரை சீக்கியர்கள் ஒதுக்கியே வைத்துள்ளனர்.

chat gpt

போதை சர்ச்சையில் நிஹாங் சீக்கியர்கள்

நிஹாங் சீக்கியர்கள் கஞ்சா பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமே இருந்துவருகிறது. தங்களை தியானத்தில் வைக்க கஞ்சா பயன்படுத்துகிறோம் என்று சொல்லப்பட்டாலும், அதை நிஹாங் பிரிவு மூத்தவர்கள் ஏற்கவில்லை. அதனால்தான் பிற சீக்கியர்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள். இருப்பினும் சீக்கிய திருவிழாக்களின்போது, பாங் எனப்படும் போதைப்பொருட்கள் கலந்த ஒரு பானத்தை நிஹாங் குடிக்கிறார்கள் என்பது கூறப்படுகிறது. சீக்கிய மதச் சட்டப்படி, போதை மருந்து பயன்படுத்துவது தடை செய்யப்பட்டாலும், மது, புகையிலைக்கு பதிலாக இதை அருந்துகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள், சிஜேபி போராட்டத்துக்கு ஏன் நிஹாங் சீக்கியர்கள் ஆதரவு?

கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கும், டெல்லியில் தற்போது கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்துக்கும் நிஹாங் சீக்கியர்கள் ஆதரவு அளித்திருந்தனர். இவர்களைப் பொறுத்தவரை நீதி எங்கெல்லாம் நசுக்கப்படுகிறதோ, அங்கு வந்து குரல்கொடுப்போம், ஒடுக்கப்பட்ட மக்கள், பிரிவினருக்கு ஆதரவாக இருப்போம், போராட்டம் திசைமாறி, வன்முறையாக மாறிவிடக்கூடாது போன்ற நோக்கங்களுக்காக ஆதரவு தெரிவிக்கிறார்கள். இளைஞர்கள், விவசாயிகள் போராடும்போது, அதில் சமூக விரோத சக்திகள் புகுந்து போராட்டத்தை உருக்குலைத்துவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பு அளிக்க வருகிறோம் என்று நிஹாங் பிரிவினர் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டத்தின்போது அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய நிஹாங் சீக்கியர்கள் கூறுகையில் ,“நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, அதுபோல் ஆகவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆனால், நிஹாங் சீக்கியர்கள் உருவாவதில் விவசாயிகள் பங்கு பெரிதாக இருக்கிறது, அவர்களின் பயணத்தில் எங்களுக்கு உணவுப் பொருட்களை பல இடங்களில் அளித்துள்ளனர். நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து எங்கள் கடமையைச் செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

ஒரு போராட்டத்தின்போது, அடக்குமுறைகளையும் தேவையற்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் மக்களைப் பாதுகாக்க, துணை நிற்க, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட நிஹாங் சிங் வருகிறார்கள்.

model image
model imagegoogle gemeni

ஒரு போராட்டத்தின்போது, அடக்குமுறைகளையும் தேவையற்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் மக்களைப் பாதுகாக்க, துணை நிற்க, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட நிஹாங் சிங் வருகிறார்கள். நிஹாங் சீக்கியர்கள், விவசாயிகள் போராட்டம் மட்டுமின்றி, தற்போது சிஜேபி போராட்டத்திலும் நிஹாங் ஆதரவு அளி்த்துள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் போராட்டங்களில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதைத் தடுக்கவும், ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவும், நிஹாங் பங்கேற்கிறார்கள். அமைதி வழியில் போராடும் மக்கள், இளைஞர்களைக் குலைக்கும் வகையில் யாரேனும் செயல்படுவதை நிஹாங் பிரிவினர் கண்டுபிடித்தால், போலீஸாரிடம் ஒப்படைக்கும் முன்பாக, அவர்களை ‘தங்களின் முறைப்படி கவனித்துத்தான்’ அனுப்புவார்கள். விவசாயிகள் போராட்டம் மட்டுமின்றி, சிஜேபி போராட்டத்தில் நிஹாங் சீக்கியர்கள் ஆதரவு அளித்து, பங்கேற்றனர் எனத் தெரிந்தவுடன் போலீஸாரும், துணை ராணுவத்தினரும் சற்றுத் தள்ளியே இருந்தனர். அதேபோல, மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் அவ்வப்போது நடக்கும் வன்முறைகளும் பெரிதாக நடக்காமல் கவனித்து, அவ்வாறு ஈடுபடுவோரைப் பிடித்து கண்டித்து நிஹாங் அனுப்பினர்.

Who is Nihang Sikhs? Why Joined on CJP Protests
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. CJP போராட்டம் கடந்து வந்த பாதை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com