சிரியாவின் ரத்த கறைகளுக்கு பின்னால் சர்வதேச அரசியல்

சிரியாவின் ரத்த கறைகளுக்கு பின்னால் சர்வதேச அரசியல்
சிரியாவின் ரத்த கறைகளுக்கு பின்னால் சர்வதேச அரசியல்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளின் அதிபர் ஆசாத்தின் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிரியாவில் தாக்குதலுக்கு ஆளான குழந்தைகளின் ரத்தம் சொட்டும் புகைப்படங்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. இந்தப் புகைப்படங்கள் பார்ப்பவர் மனங்களை கண்கலங்க வைத்துவிடுகிறது. இந்தநிலையில், சிரியாவில் நடக்கும் இந்த போர் எப்பொழுது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிரியாவில் நடக்கும் யுத்தம் குறித்த சில அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

  • சிரியாவில் எத்தனை ஆண்டுகளாகச் சண்டை நடக்கிறது? 

            2011-இல் தொடங்கி 7 ஆண்டுகளாக.

  • இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? 

           சுமார் 5 லட்சம்

  • எத்தனை பேர் அகதிகளாகி இருக்கிறார்கள்?

           80 லட்சம் பேர் உள்நாட்டுக்குள்ளும், 50 லட்சம் பேர் வெளிநாடுகளிலும் அகதிகளாக இருக்கிறார்கள்.

  • எந்தெந்த நாடுகள் சிரியாவில் சண்டையிடுகின்றன? 

          ரஷ்யா, அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்டவை

  • அமெரிக்காவும் ரஷ்யாவும் யாரை ஆதரிக்கின்றன?

           அமெரிக்கா கிளர்ச்சியாளர்களையும், ரஷ்யா அரசுத் தரப்பையும் ஆதரிக்கின்றன.

  • வேறு யாரெல்லாம் சிரியாவில் சண்டையிடுகிறார்கள்? 

          குர்துக்கள் எனப்படும் இனக்குழு, ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஹிஸ்புல்லா இயக்கம் போன்றவை.

  • இஸ்லாமிய நாடுகள் என்ன செய்கின்றன? 

          ஈரான் அரசுத் தரப்பையும், சவுதி அரேபியா கிளர்ச்சியாளர்களையும் ஆதரிக்கின்றன.

  • சண்டை ஏன் நீண்டு கொண்டே செல்கிறது? 

          சிரியாவை யார் ஆட்சி செய்வது என்பதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போட்டி.

  • ஈரானும் சவுதி அரேபியாவும் ஏன் எதிரெதிர் பக்கம் நிற்கின்றன? 

          பிராந்தியத்தில் யார் பெரியவன் என்ற அதிகார மோதல்.

  • சிரியாவில் ஆட்சியாளரை அகற்ற வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்துவது ஏன்? 

          சிரியா அதிபர் அசாத், அலாவி எனப்படும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்.

  • தற்போது கவுட்டா நகரில் நடப்பது போன்ற தாக்குதல் இதற்கு முன் எங்கெல்லாம் நடந்திருக்கிறது? 

          சிரியாவின் அலெப்போ, இட்லிப் போன்ற பகுதிகளிலும், ஈராக்கின் மோசுல் நகரிலும் நடந்திருக்கிறது
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com