விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது சரியானதா? ஆபத்தானதா? - முனைவர்.ப. உதயகணேசன் விளக்கம்

ஆற்றுப்படுக்கைகளின் அடியில் இருக்கும் களிமண் நீரை உறிஞ்சிக்கொள்வதுடன், ஆற்றுபடுகைகளின் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை அதிகரிக்க உதவுகிறது.
மண் பிள்ளையார்
மண் பிள்ளையார்PT
Published on

விநாயகர் சிலை நீர் நிலைகளில்  கரைக்கப்படுவதால் என்ன பயன்? ஏன் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது?

ஆற்றுப்படுக்கைகளில் தண்ணீர் இல்லாத காலங்களில் மணல் அள்ளப்படுகிறது இதனால் கரையோர அரிப்பு, மண்ணின் தரம் குன்றுதல் போன்றவைகளால் நிலத்தடி நீரானது குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சரி இதற்கும் விநாயகர் சதுர்த்திக்கும் என்ன சம்பந்தம் ? என்கிறீர்களா? சம்பந்தம் இருக்கு அதையும் பார்க்கலாம்.

”விநாயகர் சதுர்த்தி சத்திரபதி சிவாஜி காலத்திற்கு முன்னதாகவே கொண்டாடப்பட்டு வந்தாலும், பால கங்காதர திலகர் காலத்தில் தான் இவ்விழா இந்தியாவில் மிகவும் பிரபலமாக மாறியது. ஆவணி மாதம் சதுர்த்தி அன்று கொண்டாடப்படும் இந்த விழாவில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையானது வீடுகளில் பூஜை செய்யப்பட்டு பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு ஆறுகளில் அல்லது ஏரிகளில் கரைக்கப்படும். இதனால் என்ன இடர்பாடுகள் ஏற்படும் என்பது குறித்து,

முனைவர்.ப. உதயகணேசன் இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர் புவியமைப்பியல் துறை அழகப்பா அரசு கலைக் கல்லூரி காரைக்குடி-630 003 இவரிடம் கேள்வி எழுப்பியபோது,

விநாயகர் சதுர்த்தி அன்று கடலிலோ அல்லது ஏரி, குளங்களிலோ கரைக்கப்படும் களிமண்ணானது பல்வேறு நிலைக்கு உள்ளாகிறது. இதில் ஆற்றில் கரைக்கபடும் களிமண்ணானது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரவலாக எல்லா இடத்திலும் பரவி இருக்கும். அது ஒரே இடத்தில் தங்காது, ஏனெனில் மண் துகள்களில் மிகவும் சிறியது களிமண். சில சமயங்களிலும் ஆற்றில் நீர் இல்லாத காரணத்தினாலும் சில இடங்களில் வீடுகளுக்கு அருகில் ஆறு இல்லாத காரணத்தினாலும் மக்கள் அருகில் இருக்கும் நீர் நிலைகளான ஏரிகள் குளங்கள் ஆகியவற்றில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை கரைப்பது வழக்கம்.

ஏரி, குளங்களில் கரைத்தால் என்ன ஆகும்?

ஏரி, குளங்களில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை கரைக்கும் பொழுது அந்த களிமண்ணானது ஆற்றினைப்போல் அடித்துச் செல்லாமல் குளங்களின் அடியில் தங்கிவிடும். இவ்வாறு வருடக்கணக்காக குளத்தின் அடியில் படியும் களிமண்ணானது வெளியேற வாய்ப்பு மிகக்குறைவு. இதனால் அந்த நீர்நிலைகளின் நீர் கொள்ளளவு ஆனது குறையக்கூடும்.

”இதனால்தான் கிராமப் பகுதிகளில் ஏரி குளம் தூர் வாரும் வேலை அடிக்கடி நடைபெறும். அப்பொழுது அடியில் கிடக்கும் வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை அப்புறப்படுத்தி நீரின் கொள்ளளவை அதிகப்படுத்துவர் . இது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.

இவ்வாறு களிமண் சிலைகளை கரைப்பதனால் நீர் நிலைகளில் கொள்ளளவு மட்டுமே குறையக்கூடும் தவிர அங்கு வாழும் உயிரினத்திற்கு எவ்வித ஆபத்தும் இருக்காது.

களி மணி இல்லாமல் வேறு பொருளால் ஆன சிலையை கரைத்தால் என்ன ஆகும்?

பிளாஸ்ட்டா பாரிஸ் போன்ற பொருட்களால் சிலைகள் செய்து அதை நீர் நிலைகளில் கரைக்கும் பொழுது அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் . ரசாயன கலவையான பிளாஸ்டா பாரிஸ் என்பதுசுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள ஒரு ரசாயன பொடி. இதில் சிலைகளை செய்து ஆற்றில் கலப்பதால் நீர் நிலைகளில் சுண்ணாம்பு சத்து அதிகரிக்கக்கூடும். நீரின் காரத்தன்மை அதிகரிக்கும் பொழுது அந்த நீரில் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள் உடலில் பாதிப்புகள் உண்டாகும் .”

முனைவர்.ப. உதயகணேசன் இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர் புவியமைப்பியல் துறை அழகப்பா அரசு கலைக் கல்லூரி காரைக்குடி
முனைவர்.ப. உதயகணேசன் இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர் புவியமைப்பியல் துறை அழகப்பா அரசு கலைக் கல்லூரி காரைக்குடிPT

ஆகையால் இது போன்ற பொருட்களில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஏரிகளில் குளங்களில் கரைப்பதை தவிர்க்க வேண்டும். அதே சமயத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கரைப்பதால் உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாது ஆனால் நீர் கொள்திறன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்.

வேறு எதனால் விநாயகர் சிலைகள் செய்யலாம்?

இதற்கு பதிலாக மாவுகளில் அதாவது அரிசி மாவு, கிழங்கு மாவு - இது போன்றவைகளில் சிலை செய்து அதை கடலில் கரைக்கும் பொழுது உயிரினங்களுக்கு உணவாக பயன்படுவதுடன், இதனால் உயிர் வாழும் உயிரினங்களுக்கு உணவு அளித்தது போல் ஆகும். நாம் சுற்றுச்சூழல் பாதிக்காது” என்று கூறினார்.

ஆகவே… விநாயகர் சதுர்த்தியில் களிமண், மற்றும் மாவுப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைக்கு மட்டும் பயன்படுத்த அரசாங்கம் அறிவுறுத்தினால், நீர் நிலைகளுக்கு ஆபத்தில்லாமல், இனிமையான கொண்டாட்டமாக அமையும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com