கொரோனா காலத்தில் என்ன செய்கிறார் திண்டுக்கல் ஐ.லியோனி - ஒரு நேர்காணல்

கொரோனா காலத்தில் என்ன செய்கிறார் திண்டுக்கல் ஐ.லியோனி - ஒரு நேர்காணல்
கொரோனா காலத்தில் என்ன செய்கிறார் திண்டுக்கல் ஐ.லியோனி - ஒரு நேர்காணல்

ஐயோ கொரோனா வந்துருச்சு ஐயய்யோ கொரோனா வந்துருச்சுன்னு கொரோனாவுக்கு பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளேயே தலையில துண்டப்போட்டுக்கிட்டு ஒக்காந்து இருந்தா எல்லாம் சரியாயிருமா. காலத்துக்கு தகுந்தாப்புல நம்மள மாத்திக்கிட்டு வாழ பழகிக்கணும் என்ற திண்டுக்கல் ஐ.லியோனியிடம் தொடர்ந்து சில கேள்விகளைக் கேட்டோம்.

முன்பைவிட ஸ்லிம்மாக மாறி இருக்கீங்களே ரகசியம் என்ன?


பேச்சாளர்கள் வெளியில பேசுறதுக்கு போறப்ப பாத்தீங்கன்னா. பேசி முடுஞ்சதுக்கு அப்புறமா எங்கள நல்லா கவனிக்கிறேங்குற பேர்ல ராத்திரி 11 மணிக்கிமேல வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயி மட்டன் பிரியாணி மட்டன் சுக்கா சிக்கன்65 லெக்பீஸ்ன்னு வெயிட்டா கவனிப்பாங்க. அதுவும் நான் சிறப்புப் பேச்சாளராச்சே என்னை எப்படி கவனிப்பாங்கன்னு பாத்துக்கோங்க. எல்லா அயிட்டத்தையும் இலை நெறையா வெச்சு ஒருகட்டு கட்டிட்டு அடுத்த நாள் காலைல வலதுபக்கமா இழுத்துபுடிக்குது இடதுபக்கமா இழுத்துபுடிக்குதுன்னு டாக்டரைதேடி ஓடுவேன்.  
இப்பெல்லாம் எனது உணவு பழக்க வழக்கத்தையே மாத்திக்கிட்டேன். முன்பெல்லாம் காலைல காபி அல்லது கிரீன் டீ குடுச்சுக்கிட்டு இருந்தேன். இன்னிக்கி பாத்தீங்கன்னா எலுமிச்சை இஞ்சி ஓமம் சித்தரத்தை கலந்த சூடான குடிநீரை காலைல வெறும் வயித்துல முப்பதுநாளக்கி குடிச்சேன். அதனால  உடம்புல இருந்குற ஜீரண உறுப்புகளை ஓவர்ஆயிலிங் பண்ணியதுபோல உணர்ந்தேன். அதன்பிறகு காலைல 11 மணிக்கி சுக்கு மிளகு திப்பிலி கலந்த கசாயம். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு மூணுமணிக்கி வெள்ளைப்பூண்டை அறைத்து பாலில் கலந்து சாப்பிட்டேன். இரவு திரிபலா சூரணத்தை சுடுதண்ணில கலந்து குடுக்கிறேன். இப்படி தமிழ் மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். அதனால பேச்சாளர்களுக்கு வரக்கூடிய தும்மல் இருமல் காய்ச்சல் என எந்த நோய்தொற்றும் இல்லாம் நிம்மதியாக இருக்கிறேன். இதன்மூலமாக தமிழ் மருத்துகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை என்னால் அறிய முடிகிறது.

ரசிகர்கள் இல்லாமல் கேமராமுன்பு பட்டிமன்றம் நடத்துவது எப்படி இருக்கிறது?


ஒருபேச்சாளர் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது அவனுடைய கைதட்டும் விசில் சப்தமும்தான். அதுதான் எனக்கு உற்சாக டானிக். நாம பேசும்போது ஒருபதினைந்து நிமுசம் ரசிகர்கள் கைதட்டாம விசில் அடிக்காம ஒக்காந்து இருந்தாங்கன்னா, நாம ஏதோ தப்புபண்றோம் ரசிகர்களை விட்டு விலகிப்போறோம் நாம பேசுறது அவங்களுக்கு புரியல என்பதை தெருஞ்சுக்கிட்டு இடையிலே ஒருபாட்டைப் போடுவோம். இல்லாட்டி ஒரு நகைச்சுவையை போடுவோம். இதெல்லாம் நாங்க மேடைகள்ல கடைபிடிக்கிற முறை. ஆனா கேமரா முன்னாடி பேசுறதுக்கு அதெல்லாம் தேவையில்லை. அதேமாதிரி அந்த நிகழ்ச்சி யூ டியூப்ல வந்ததுக்கு அப்புறம் அதை பாத்துட்டு போன்பண்ணி பாராட்டுவாங்க அதைவந்து நாங்க கைதட்டாவும் விசிலாவும் நெனச்சு பேசிக்கிட்டு இருக்கோம்.

புதிதாக ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருப்பது பற்றி?


பட்டிமன்றம் பாட்டுமன்றம் பொதுக்கூட்டம்னு ரொம்ப பிஸியாக இருந்ததால் ட்விட்டர் கணக்கெல்லாம் துவக்காமல் இருந்தேன். இந்த கொரோனா காலத்துல வீட்லேயே இருப்பதால் புதிதாக ட்விட்டர் கணக்கை தொடங்கி இருக்கிறேன். இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. எனது கருத்துக்களை உடனடியாக பதிவிட முடிகிறது. இப்படித்தான் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுத்தாங்க அதுக்கு ட்விட்டர்ல நான் ஒருபதிவு போட்டிருந்தேன். அது ரொம்பவே வைரலானது.

ட்விட்டரின் பயன் எப்படி இருக்கிறது?


ட்விட்டரின் பயன் யாருக்கு கிடைத்ததோ இல்லையோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னுடைய கருத்தை உடனடியாக மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் ட்விட்டரின பங்கு அதிகம். அதற்கு உதாரணமாக சொல்லணும்னா சாத்தான்குளம் சம்பவம். மற்றும் இந்த கொரோனா காலத்துல பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சிறுமிகளை பற்றி ஒருபதிவு போட்டேன். அதுஎன்னான்னா தருமபுரியில் பெண்களை எரித்தவர்கள் விடுதலை ஆணவக்கொலைகள் செய்ய காரணமானவர்கள் விடுதலை. இப்படி விடுதலைகள் தொடர்ந்தால் கொடூர கொலைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு கடுமையான தண்டனைதான் தீர்வு அப்படீன்னு ட்விட்டர்ல பதிவிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் தூக்குதண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஒருபத்து தூக்குதண்டனைகளாவது நிறைவேற்றப்பட்டால்தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்னு பதிவுபோட்டேன் அரசியில் தலைவர்கள் எல்லாம் அழைத்து பாராட்டினார்கள். இப்ப கூட்டுறது வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில்லை என்பதை கேள்விப்பட்டு ஒருட்விட் போட்டேன். கூட்டுறவு சங்கத்துக்கு எடப்பாடி அரசு போட்டது பூட்டு. இது மத்திய அரசுடன் வைத்துள்ள பொல்லாத கூட்டு. இது ஏழைஎளிய விவசாயிகளுக்கு வைத்த வேட்டு. நீங்கள் சொல்வதெல்லாம் என்னாளும் பொய்யும் புரட்டு. இதனால் இல்லை உங்களுக்கு பொதுமக்களின் ஓட்டு அப்படீங்கிறமாதிரி ஒருபதிவை போட்டிருந்தேன். இந்த ட்விட்டுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படியாக ட்விட்டர் கணக்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.      

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com