அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்திருக்கும் ’ஜைகோவ் - டி’ தடுப்பூசி பற்றிய தகவல்கள்!

அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்திருக்கும் ’ஜைகோவ் - டி’ தடுப்பூசி பற்றிய தகவல்கள்!
அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்திருக்கும் ’ஜைகோவ் - டி’ தடுப்பூசி பற்றிய தகவல்கள்!

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய 4 தடுப்பூசிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து இந்தியாவில் ஐந்தாவது கொரோனா தடுப்பு மருந்தாக களம் காண இருக்கிறது ‘ஜைகோவ் - டி’ . அவசரகால பயன்பாட்டின்கீழ், இந்த தடுப்பூசியை பொதுவிநியோக பயன்பாட்டுக்கு ஒப்புதல் கோரி இந்திய மருந்து மற்றும் ஆராய்ச்சி கழகத்திடம் இன்று விண்ணப்பித்துள்ளது ‘ஜைகோவ் - டி’யை தயாரித்த அகமதாபாத் ‘ஜைடஸ் கெடிலா’ நிறுவனம்.

முன்னராக சமீபத்தில் இம்மருந்தின், இறுதிகட்ட ஆய்வுகள் யாவும் நடத்தப்பட்டது. அதில், 28,000 தன்னார்வலர்கள் ஈடுப்பட்டிருந்திருந்தனர். அவர்களில் 12 - 18 வயதினர், 1,000 த்துக்கும் மேற்பட்டோர். அனைவருக்குமே இம்மருந்து ஆரோக்கியமானதாக உறுதிசெய்யப்பட்டிருப்பதாக ஜைடஸ் கெடிலா நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ‘ஜைகோவ்-டி’ குறித்து, இதுவரை வெளிவந்திருக்கும், அடிப்படையான சில தகவல்களை இங்கே காணலாம்:

* இதுவரை இந்தியாவில் ஒரு டோஸ் / இரு டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே விநியோகத்தில் உள்ளது. இந்த ‘ஜைகோவ்-டி’, மூன்று டோஸ்கள் கொண்டது. இருப்பினும், 3 டோஸை குறைத்து இரு டோஸாக போடுவதற்காக வழிமுறைகளை ஆய்வு செய்வதாக ‘ஜைடஸ் கெடிலா’ நிறுவனம் அறிவித்துள்ளது.

* ’ஜைகோவ்-டி’யை, ஊசி இல்லாமல் நேரடியாக தரப்படும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ‘ஜைடஸ் கெடிலா’ நிறுவனம் கூறியுள்ளது.

* அனுமதி கிடைத்தவுடன், இந்தியாவில் வளரிளம் பருவத்தினருக்கும் (12 - 18 வயதினருக்கு) இம்மருந்து பரிசோதிக்கப்படவுள்ளது. அப்படி போடப்பட்டால் இந்தியாவில், வளரிளம் பருவத்தினருக்கு தடுப்பூசி பரிசோதிப்பது முதன்முறையாக இருக்கும்.

* இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளில், பெரியவர்களுக்கு இந்த தடுப்பூசி எந்தளவுக்கு தரமுடன் செயல்படுகிறதோ, அதேபோல வளரிளம் பருவத்தினருக்கும் செயல்படுவதும் உறுதியாகியுள்ளது.

* ‘ஜைகோவ்-டி’ எடுத்துக் கொள்பவர்களுக்கு, 66.6% அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தடுக்கப்படுவதாகவும், 100% மிதமான கொரோனா பாதிப்பு தடுக்கப்படுவதாக ஜைடஸ் கெடிலா  நிறுவனம் கூறியுள்ளது.

* இதுவரை இந்தியா முழுக்க 50 மையங்களில், இதன் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக, ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் எதுவும், முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பதால், முழுமையாக விவரம் தெரியவரவில்லை.

* ஜைகோவ்-டி’ , பிளாஸ்மிட் டி.என்.ஏ. வகை தடுப்பு மருந்தாக இருக்கும். இதை எடுத்துக்கொள்ளும்போது, உடலில் கோவிட் 19 கொரோனாவை போல ஸ்பைக் புரதம் கொண்ட மாதிரி கொரோனா வைரஸ் உருவாகும். அது, உடலை கோவிட் -19 க்கு எதிராக்கும். பிளாஸ்மிட் டி.என்.ஏ. வழிமுறை கொண்டு தயாரிக்கப்படும், உலகின் முதல் தடுப்பூசியாக, இது இருக்கும்.

* இந்த தடுப்பூசியை, 2 - 8 டிகிரி செல்ஷியஸில் சேமித்தால் போதுமானதாக இருக்கும். 25 டிகிரியில் சேமிக்கும்போது, குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு இதை சேமிக்க முடியுமென தெரிகிறது. இதன்மூலம், தடுப்பூசி வீணடிப்பது குறைவாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி சேமிப்பும் எளிதாக அமையக்கூடும்.

* இந்தியாவில், இரண்டாவது அலை கொரோனா பாதிப்பில் முக்கிய காரணியாக இருந்த டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக, இந்த ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி செயல்படும் என ‘ஜைடஸ் கெடிலா’ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

* ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி வரை தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

* ஒருவேளை இந்திய மருந்து மற்றும் ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்புதல் பெற்றால், இந்தியாவில் கண்டறியப்படும் இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசியென்ற பெருமையை அடையும். முதலாவது கொரோனா உள்நாட்டு தடுப்பூசி, கோவேக்சின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com