வீடியோ கேம் விளையாடுவது போல் நிஜக்காரை ஓட்டலாம்
ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான வோக்ஸ்வாகன் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய காரை தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் வோக்ஸ்வாகன் நிறுவனம் ஸ்டேரிங் மற்றும் சாவி இல்லாமல் முழுவதுமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. வோக்ஸ்வாகன் அறிமுகப்படுத்தியிருக்ககூடிய இந்த தொழில்நுட்பம் மூலமாக வீடியோ கேம் விளையாடும் போது காரை எப்படி ஓட்டுவோமோ அப்படியே இனி நிஜ வாழ்க்கையிலும் ஓட்ட முடியும்.
அதே போல மற்றொரு தொழில் நுட்பமாக காரை மொபைல் ஃபோன் மூலம் இயக்கக் கூடிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது இதற்காக கொடுக்கப்பட்டிருக்க கூடிய பிரத்யேக அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் மூலம் அதன் உள்ளே சென்று நம்மால் காரை லாக் செய்வது, ஒபன் செய்வது போன்ற செயல்பாடுகளை செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோக்ஸ்வாகன் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டே இது போல ஒரு தொழில்நுட்ப கார்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்திருந்த நிலையில் மின்ணணு கண்காட்சியில சோதனை கார்களையும் ,ஸ்மார்ட்ஃபோன் சாவியினையும் அறிமுகப்படுத்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வகை கார்கள் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த டிஜிட்டல் காரின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.