குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ள வெங்கைய நாயுடுவின் முழுப்பெயர் முப்பவரப்பு வெங்கய்ய நாயுடு.
1949ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் சவட்டப்பாலம் என்ற ஊரில் பிறந்த வெங்கையா விசாகப்பட்டினத்தில் சட்டம் பயின்றார். ஆர்எஸ்எஸ் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளில் இருந்த அவர், பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். 1978ல் ஜனதா கட்சி சார்பில் நெல்லூர் எம்எல்ஏவாக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வெங்கையா, பின்னர் பாரதிய ஜனதாவில் இணைந்து 1998, 2004, 2010ம் ஆண்டுகளில் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை எம்பி ஆனார்.
1993ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பையும் வெங்கையா வகித்தார் 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த இவர், 2002ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் பதவியையும் வகித்தார்.
2014 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற பின்னர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது இவர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக உள்ளார். தற்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.